Asianet News TamilAsianet News Tamil

தமிழகத்தில் பெண்கள் சிறுநீரகம்,கருமுட்டை விற்கும் அவலம்.!! திமுக தலைவர் குற்றச்சாட்டு.!!

பெண்கள் வறுமையின் காரணமாக கருமுட்டை,சிறுநீரகம் போன்றவற்றை விற்பனை செய்யும் அவல நிலை தமிழகத்தில் ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாள் என தமிழக அரசு அறிவித்திருப்பதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Women sell kidney and kidney problems in Tamil Nadu DMK leader accused.
Author
Chennai, First Published Feb 25, 2020, 11:53 PM IST

T.Balamurukan

பெண்கள் வறுமையின் காரணமாக கருமுட்டை,சிறுநீரகம் போன்றவற்றை விற்பனை செய்யும் அவல நிலை தமிழகத்தில் ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாள் என தமிழக அரசு அறிவித்திருப்பதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Women sell kidney and kidney problems in Tamil Nadu DMK leader accused.

இதுதொடர்பாக ட்வீட்டர் பக்கத்தில் ஸ்டாலின் பதிவிட்டிருப்பதாவது;

'மோடி அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை பொருளாதாரச் சீரழிவு, அடிமை அ.தி.மு.க அரசின் டாஸ்மாக் வியாபாரம் இவற்றால் ஈரோடு நாமக்கல் மாவட்ட விசைத்தறித் தொழில் கடும் பாதிப்புக்குள்ளாகி, அதனை நம்பி இருந்த அனைவரின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகி உள்ளது.இதனால் ஏற்பட்டுள்ள கொடிய வறுமை நிலையை எதிர்கொள்வதற்காக, பெண்கள் தங்கள் கருமுட்டையை விற்பனை செய்யும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்ற நெஞ்சைப் பிளக்கும் செய்தி இணையத்தில் வெளியாகியுள்ளது.

Women sell kidney and kidney problems in Tamil Nadu DMK leader accused.

அதுமட்டுமின்றி, சிறுநீரகத்தை விற்பனை செய்யும் அவலமும் தொடர்கிறது. பெண்களின் உயிருக்கே ஆபத்தை உண்டாக்கி, குடும்பங்களில் வன்முறையை விதைக்கும் இந்த அவலம் எப்போது முடிவுக்கு வரும்? பெயரளவுக்கு பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாள் கொண்டாடுவோர் இந்த விவகாரத்தின் மீது உண்மையான அக்கறையைச் செலுத்துவார்களா? இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்

Follow Us:
Download App:
  • android
  • ios