Asianet News TamilAsianet News Tamil

கால்ல விழுவீங்களா..? உள்ளாட்சி தேர்தலுக்காக வேட்பாளர்களை மெர்சலாக்கிய செல்லூர் ராஜூ..!

உள்ளாட்சித் தேர்தலில் வாக்குகளை பெறுவதற்கு செல்லூர் ராஜூ வேட்பாளர்களுக்கு வித்தியாசமான ஐடியாக்களை கொடுத்துள்ளார். 

Will you fall? Seluru Raju joins candidates for local elections
Author
Tamil Nadu, First Published Dec 21, 2019, 12:44 PM IST

தமிழகத்தில் இன்னும் ஒரு சில நாட்களில் உள்ளாட்சித் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளன. பல இடங்களில் ஊராட்சித் தேர்தலுக்கு ஏலம்விடும் சம்பவங்களும் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. இந்நிலையில் மதுரை மாவட்டம், மேலூரில் அதிமுகவின் தேர்தல் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்து கொண்டு, மக்களிடம் எப்படி வாக்கு சேகரிப்பது என்பது குறித்து ஆலோசனை வழங்கினார். Will you fall? Seluru Raju joins candidates for local elections

அதிமுக வேட்பாளர்கள் மத்தியில் பேசத் தொடங்கிய செல்லூர் ராஜு, “உள்ளாட்சித் தேர்தலைப் பொறுத்தவரை, நீங்கள் அரசியல் பேசக் கூடாது. எதிர்க்கட்சிகளைப் பற்றி குறை சொல்லக் கூடாது. உங்களால் என்ன செய்ய முடியும் என்பது குறித்து மட்டும் பிரசாரம் செய்ய வேண்டும். வீடு வீடாக சென்று வாக்காளர்களைச் சந்திக்க வேண்டும். அம்மா ஓட்டு போடுங்க, மாமா ஓட்டு போடுங்க, தங்கச்சி ஓட்டு போடுங்க, ஐயா ஓட்டு போடுங்க என்று சகஜமாக பேச வேண்டும். நாங்கள்தான் ஆளுங்கட்சியினர். எங்களால்தான் உங்களுக்கு வேண்டியதைச் செய்து கொடுக்க முடியும் என்பதை எடுத்துச் சொல்ல வேண்டும்,” என்றார்.Will you fall? Seluru Raju joins candidates for local elections

ஒரு கட்டத்தில் செல்லூர் ராஜூ, “வாக்காளர்கள் காலில் விழுந்து வாக்கு சேகரிக்க வேண்டும். விழுவீர்களா..?” என்று கேட்டார். அதற்கு எல்லோரும், “விழுவோம்…” என்று பதில் அளித்தனர்.  

Follow Us:
Download App:
  • android
  • ios