ஏப்ரல் 14 வரை போடப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்படும என்கிற சந்தேகம் மக்கள் மனதில் எழுந்துள்ளது. அதனை உறுதி செய்யும் வகையில் சில அமைப்புகள் கணிப்புகளை வெளியிட்டுள்ளன. 

ஜான்ஸ் ஹாப்கின்ஸுடன் இணைந்து நோய் இயக்கவியல், பொருளாதாரம் மற்றும் கொள்கை மையம் (சி.டி.டி.இ.பி) தோராயமாக ஒரு கணிப்பை வெளியிட்டுள்ளது. அதில், ’’கொரோனா பாதிப்பு ஊரடங்கு உத்தரவை மீறினால் நாம் அதிக விலை கொடுக்க வேண்டியது வரும். மே மாதத்தில் நோய் அதிகரிக்கும் போது 60,000 பேர் வரை தமிழகம் முழுவதும் மருத்துவமனைகளில் இருக்கக்கூடும்.

மோசமான நிலையில், எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தொடக்கூடும்’’ என்று கூறியுள்ளது. ‘’மக்கள் ஊரடங்கை சரியாக கடைபிடிக்கவில்லை என்றால் கொரோனா அதிகம் பரவ வாய்ப்புள்ளதாக’’ கொரோனா கட்டுப்பாட்டு  அறை அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர். 

அதேநேரம், மத்திய அரசு ரூ.1.70 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்து, மூன்று மாதங்களுக்கு இலவச சிலிண்டர், அரிசி, பருப்பு, பண உதவித் தொகைகளையும் அறிவித்துள்ளது. இதனால், வரும் ஏப்ரல் 14ம் தேதி வரை மத்திய அரசு விதித்துள்ள ஊரடங்கு உத்தரவு மேலும் நீடிக்கப்படுமா? என்கிற சந்தேகம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் மார்ச் 31 வரை பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு ஏப்ரல் 14ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டதை போல மே மாதம் வரை நீடிக்கப்படுமா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது. மக்கள் ஊரடங்கை சரியாக கடைபிடித்தால், கோரோனாவை விரட்டியடித்து மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பும் வாய்ப்பு ஏற்படும். இல்லையேல் ஊரடங்கு நீடிக்கப்படுவதை தவிர்க்க இயலாது என மருத்துவத்துறையினர் கூறுகின்றனர்.