Asianet News TamilAsianet News Tamil

இடைத்தேர்தலில் திமுக -காங்கிரஸ் தோற்றது ஏன் தெரியுமா..? ஹெச்.ராஜா சொல்லும் பகீர் காரணம்..!

திராவிட இயக்கங்கள் ஹிந்தி மொழி மீதும், சமஸ்கிருத மொழி மீதும் தம் இயக்கத்தவர்கள் மனதில் மொழி காழ்ப்புணர்வை வளர்த்தன. ஜாதிக் காழ்ப்புணர்வை வளர்த்தன. 

Why the DMK-Congress lost in the by-election..? reason for saying H.Raja
Author
Tamil Nadu, First Published Oct 24, 2019, 10:40 AM IST

நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக முன்னணி வகித்து வருகிறது. இந்நிலையில் திமுக கூட்டணி தோல்வி அடைந்தது எனதால் என்கிற பகீர் காரணத்தை பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

 Why the DMK-Congress lost in the by-election..? reason for saying H.Raja

நாங்குநேரியில் அதிமுக வேட்பாளர் நாராயணனும், விக்கிரவாண்டியில் முத்தமிழ்செல்வனும் முன்னிலை வகித்து வருகின்றன. இரண்டு தொகுதிகளிலும் திமுக கூட்டணி தோல்வியை தழுவும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்துத் தெரிவித்துள்ள ஹெச்.ராஜா, ‘’தமிழக இடைத்தேர்தலில் பகவத்கீதையையும், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரையும் இழித்தும், பழித்தும் பேசிய திக, திமுக, காங்கிரஸ், மதிமுக, விசிக, இந்து விரோத தீயசக்திகளுக்கு தமிழக வாக்காளர்கள் மரண அடி. Why the DMK-Congress lost in the by-election..? reason for saying H.Raja

திராவிட இயக்கங்கள் ஹிந்தி மொழி மீதும், சமஸ்கிருத மொழி மீதும் தம் இயக்கத்தவர்கள் மனதில் மொழி காழ்ப்புணர்வை வளர்த்தன. ஜாதிக் காழ்ப்புணர்வை வளர்த்தன. நாத்திகம் என்ற போர்வையில் ஹிந்து மதத்தின் மீதும் காழ்ப்புணர்வை வளர்த்தன’’ என அவர் தெரிவித்துள்ளார்.

 

Follow Us:
Download App:
  • android
  • ios