Asianet News TamilAsianet News Tamil

டெல்லி, காங்கிரஸை ஏன் கலைக்க கூடாது? பிரணாப் முகர்ஜி மகள், ப.சிதம்பரம் மோதல்.!!

ப.சிதம்பரத்தின் கருத்து தொடர்பாக விமர்சனங்கள் பறந்துக்கொண்டிருக்க முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் மகளும், டெல்லி மகளிர் காங்கிரஸ் தலைவியுமான ஷர்மிஸ்தா முகர்ஜி, நேரடியாகவே சிதம்பரத்தை எதிர்த்து தன்னுடைய விமர்சனத்தை பதிவு செய்திருக்கிறார்.

Why not dissolve Congress party in Delhi? Pranab Mukherjee's daughter, Pa.
Author
Delhi, First Published Feb 13, 2020, 6:52 AM IST

by; T.Balamurukan

   ஆம் ஆத்மி  கட்சி டெல்லியை மீண்டும் கைப்பற்றியதற்கு  ப.சிதம்பரம் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்தார். சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் காங்கிரஸ் கட்சிக்கு எந்த அளவுக்கு மீம்ஸ் போட முடியுமோ அந்த அளவிற்கு மீம்ஸ் போட்டு கழுவி கழுவி ஊற்றி வருகிறார்கள். இந்தநேர்த்தில் சிதம்பரம் ,அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வாழ்த்து சொல்லியிருப்பது காங்கிரஸ் கட்சிக்குள் கூடுதலான புகைச்சலை கிளப்பி இருக்கிறது.அவர் வாழ்த்து சொன்னதை தாங்கி கொள்ளாத பிராணாப் முகர்ஜி மகள், அப்படி என்றால் மாநில காங்கிரசை கலைத்துவிடலாமா? என சிதம்பரத்துக்கு கேள்வி எழுப்பியிருக்கிறார்.

Why not dissolve Congress party in Delhi? Pranab Mukherjee's daughter, Pa.

டெல்லி சட்டசபை தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி 62 தொகுதிகளை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றிருக்கிறது. பா.ஜனதா 8 இடங்களை பெற்று எதிர் கட்சி வரிசையில் அமர்ந்திருக்கிறது. காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்தது. அந்த கட்சியை சேர்ந்த 63 வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர். காங்கிரஸ் கட்சி படுதோல்வியை தழுவினாலும், அந்த கட்சினர் பா.ஜனதா வெற்றியடையாததற்கு மகிழ்ச்சி தெரிவித்தனர். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ப.சிதம்பரமும் தனது டுவிட்டர் பக்கத்தில் ஆம் ஆத்மிக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்,இது தான் காங்கிரஸ் கட்சிக்குள் பூதாகரமாக கிளம்பி இருக்கிறது.

Why not dissolve Congress party in Delhi? Pranab Mukherjee's daughter, Pa.

இந்த டுவிட்டர் செய்தியை வைத்து காங்கிரசை கேலி செய்யும் விதமாக மீம்ஸ்கள் சமூக வலைத்தளங்களில் வெளியானது. ஒரு தொகுதியில்கூட வெற்றி பெறவில்லை, உங்களை தோற்கடித்ததற்காக இந்த நன்றியா என்று பலர் கேளி செய்து வருகின்றனர்.ப.சிதம்பரத்தின் கருத்து தொடர்பாக விமர்சனங்கள் பறந்துக்கொண்டிருக்க முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் மகளும், டெல்லி மகளிர் காங்கிரஸ் தலைவியுமான ஷர்மிஸ்தா முகர்ஜி, நேரடியாகவே சிதம்பரத்தை எதிர்த்து தன்னுடைய விமர்சனத்தை பதிவு செய்திருக்கிறார்.

Why not dissolve Congress party in Delhi? Pranab Mukherjee's daughter, Pa.

டெல்லி மகளிர் காங்கிரஸ் தலைவியுமான ஷர்மிஸ்தா முகர்ஜி வெளியிட்ட டுவிட்டர் பதிவில், “டெல்லியில் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்து உள்ளது. ஆனால், நீங்களோ ஆம் ஆத்மியின் வெற்றியை கொண்டாடுகிறீர்கள். உங்களுக்கான மரியாதையை கொடுத்து கேள்வியொன்றை முன்வைக்கிறேன். பா.ஜனதாவை தோற்கடிக்கும் பணிக்காக காங்கிரஸ், மாநில கட்சிகளை வெளிப்பயணியாளர்கள் அடிப்படையில் நியமனம் செய்துள்ளதா? அப்படி இல்லையென்றால் நம்முடைய தோல்வியை பற்றி கவலைக்கொள்ளாமல் ஆம் ஆத்மியின் வெற்றியை ஏன் கொண்டாட வேண்டும்? ஒருவேளை என்னுடைய கேள்விக்கு ‘ஆம்’ என்பது பதிலாக இருந்தால், நாம் ஏன் மாநில காங்கிரசை மூடிவிட்டு செல்லக்கூடாது! என பதிவிட்டார். அவருடைய கருத்துக்கு பலர் ஆதரவையும், எதிர்ப்பையும் தெரிவித்து டுவிட்டரில் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios