கொரோனா வைரஸ் எங்களைத் தாக்காது. பரமசிவன் எங்களை பாதுகாக்கிறார் என நித்யானந்தா கூறியுள்ளார். 

கொரோனா வைரஸ் தொற்று ஒரே நாளில் புதிதாக 12 நாடுகளுக்கு பரவியிருப்பதாகவும், புதிதாக 9,769 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும், புதிதாக 438 பேர் இறந்திருப்பதாகவும் உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கிறது.

இந்நிலையில் ஈக்வடார் அருகே நித்யானந்தா உருவாக்கிய தனி நாடான ’கைலாசா’தீவில் கொரோனா பாதிப்பு குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் “கொரோனா வைரஸால் நாங்கள் பாதிக்கப்படவில்லை. கொரோனா வைரஸ் எங்களைத் தாக்காது. எதிர்காலத்திலும் எங்களைத் தாக்காது. ஏனெனில் பரமசிவன் எங்களைப் பாதுகாத்து வருகிறார். கால பைரவரும் எங்களுக்கு உற்ற துணையாக இருந்து பாதுகாவலாக இருக்கிறார் “என்று குறிப்பிட்டுள்ளார். 

பாலியல் வழக்கில் நித்யானந்தாவிற்கு புளூ கார்னர் நோட்டீஸ் பிறப்பித்து தேடும் பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில் தினம் தினம் இப்படி வீடியோ வெளியிட்டு வருகிறார். தற்போது கொரோனா குறித்த அவரது ட்வீட் சமூகவலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.