Asianet News TamilAsianet News Tamil

பாகிஸ்தானுக்கும் - காங்கிரஸ் கட்சிக்கும் இடையே ஒர்க் -அவுட்டான கெமிஸ்ட்ரி... மோடி அதிரடி பேச்சு..!

காஷ்மீர் தொடர்பாக காங்கிரஸ் கட்சியினர் வெளியிடும் தவறான தகவல்கள், அறிக்கை மற்றும் பேச்சுக்களை உலக அரங்கில் பாகிஸ்தான் அப்படியே வலுவாக எடுத்துவைக்கிறது. 

What kind of chemistry is this with Pakistan PM questions
Author
Delhi, First Published Oct 18, 2019, 6:35 PM IST

காங்கிரஸ் கட்சி தலைவர்களின் கருத்தக்களை எல்லாம் பாகிஸ்தான் மிக அழுத்தமாக பிடித்துக்கொள்ளும் நிலையில் அந்நாட்டுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே உள்ள வேதியியல் தொடர்பு என்ன? என பிரதமர் மோடி கேள்வி எழுப்பியுள்ளார்.What kind of chemistry is this with Pakistan PM questions

அரியானா மாநிலம், சோனிபேட்டில் பேசிய அவர், ’’காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்த்தை ரத்து செய்யப்பட்டது நாட்டு நலன் கருதி எடுக்கப்பட்ட முக்கிய முடிவு.  ஆகஸ்ட் 5-ம் தேதி காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படும் என யாருமே நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார்கள். கடந்த 70 ஆண்டுகளாக ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகளின் வளர்ச்சிக்கு தடையாக சிறப்பு சட்டம் இருந்து வந்தது. ஆகையால், நாம் அந்த சட்டத்தை நீக்கிவிட்டோம். What kind of chemistry is this with Pakistan PM questions

இந்த நடவடிக்கையால் காங்கிரஸ் மற்றும் அவர்களை போன்ற கட்சிகள் மிகவும் வலியில் உள்ளன. அந்த வலியை தீர்க்க மருந்தே கிடையாது. காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது தொடர்பாக காங்கிரஸ் கட்சியினரின் பேச்சினை பாகிஸ்தான் நாட்டினர் மிகவும் விரும்புகின்றனர். அக்கட்சியினர் இந்தியர்கள் விரும்பும் விதமாக வலிமையுடன் பேச வேண்டும். ஆனால், காங்கிரஸ் கட்சியினரின் பேச்சு பாகிஸ்தானுக்கு உதவிகரமாக இருக்கிறது. What kind of chemistry is this with Pakistan PM questions

காஷ்மீர் தொடர்பாக காங்கிரஸ் கட்சியினர் வெளியிடும் தவறான தகவல்கள், அறிக்கை மற்றும் பேச்சுக்களை உலக அரங்கில் பாகிஸ்தான் அப்படியே வலுவாக எடுத்துவைக்கிறது. பாகிஸ்தானுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே என்ன கெமிஸ்டிரி நிலவுகிறது? யாருக்காக இந்த கெமிஸ்டிரி? வாக்களிக்கும் போது நீங்கள் இந்த கேள்விகளுக்கான பதில்களை கண்டுபிடிக்க வேண்டும்’’ என அவர் தெரிவித்தார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios