வெறுப்புணர்வை தூண்டும் கருத்துக்களை கூறும் கட்சியில் என்னால் இருக்க முடியாது என  மேற்கு வங்க நடிகை சுபத்ரா முகர்ஜி கூறியுள்ளார் . பாஜகவிலிருந்து  தனது பதவியை ராஜினாமா செய்துள்ள அவர் இவ்வாறு கூறியுள்ளார் .  இது குறித்து தெரிவித்துள்ள அவர்,  நாடு முழுவதும் மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டம் வெடித்துள்ளது.   மற்றொரு பக்கம் ஆதரவு போராட்டம் மற்றும் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் நடந்து வருகின்றன .  இந்நிலையில் இரு தரப்புக்கும் இடையே டெல்லியில் கடந்த வாரம் மோதல் வெடித்தது . அந்த  வன்முறையில் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 

நூற்றுக்கணக்கானோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இந்நிலையில் வன்முறையை தூண்டும் வகையில் பேசும் பாஜகவில் தன்னால் இருக்க முடியாது ,  கடந்த 2013 ஆம் ஆண்டு பாஜகவில் நான்  இணைந்தேன்.   பாஜகவின் செயல் மற்றும் அதன் கொள்கை போன்றவற்றால்  ஈர்ப்பு ஏற்பட்டே இணைந்தேன்.  கட்சியில் இணைந்த  சில காலமாக கட்சியின் செயல்பாடுகள் சரியில்லை என்பதை தெரிந்து கொண்டேன்.   கட்சி சரியான பாதையில் பயணிக்க வில்லை என உணர்கிறேன் .  மக்களை மதத்தால் தீர்மானிக்கவும் , வெறுப்புணர்ச்சியை  உருவாக்குவதுமே பாஜகவின் சித்தாந்தமாக மாறி வருகிறது. 

எனவே தீவிரமான ஆலோசனைக்குப் பின்னரே இந்த கட்சியில் இருந்து விலக முடிவு செய்தேன்.  டெல்லியில் நடந்த வன்முறையை அனைவரும் பார்த்தீர்கள்.  மக்கள் எந்தளவிற்கு கொல்லப்பட்டனர் ,  எத்தனைபேர்  வீடுகளை இழந்தனர்.  என்பதே பார்த்தீர்கள்.   வன்முறையையும்,   வன்மத்தையும்  விதைக்கும்  அனுராக் தாக்கூர்,  கபில் மிஸ்ரா போன்றோர் இருக்கும் கட்சியில் என்னால் இருக்க முடியாது .  இந்தக் காட்சியில் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை ,  மோசமாக பேசிய இந்த அரசியல்வாதிகள்  மீது இதுவரை நடவடிக்கை எடுக்காத இந்த கட்சியில் என்னால் இருக்க முடியாது  என முடிவு செய்ததால்  கட்சியில் இருந்து விலகுகிறேன்.  எனது ராஜினாமா கடிதத்தை மாநில தலைவருக்கு முறையாக அனுப்பி விட்டேன் என கூறியுள்ளார்.