நீங்களும், ராமதாஸும் விளக்கு புடிச்சு அதை ஃபோட்டோ போட்டு விட போறிங்க. பின்விளைவுக்கு நாங்கள் பொறுப்பல்ல என திமுக தருமபுரி எம்.பி., செந்தில்குமார் கிண்டலடித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டவிட்டர் பக்கத்தில், "நாங்க பணம் வாங்குனப்போ நீங்க விளக்கு பிடிச்சிங்களா" என எங்கள பார்த்து கேள்வி கேட்ட டாக்டர் அன்புமணி ராமதாஸ் அவர்களே

இல்லை நாங்க எந்த விளக்கும் பிடிக்கல. பார்த்து யாரோ சொன்னாங்கனு நீங்களும், ஐயா ராமதாஸும் விளக்கு புடிச்சு அத ஃபோட்டோ போட்டு விட போறிங்க. பின்விளைவுக்கு நாங்கள் பொறுப்பல்ல’’ எனத் தெரிவித்துள்ளார்.

பாமக எம்.பி. டாக்டர் அன்புமணி 3 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கி அறிவித்தார். ஒவ்வொரு எம்.பி.க்கும் தொகுதி மேம்பாட்டு நிதியாக வருடத்துக்கு 5 கோடி ரூபாயை ஒதுக்குகிறது மத்திய அரசு. அந்த வகையில், தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து முதல்கட்டமாக 3 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ள அன்புமணி, ’’தேவைப்பட்டால் இன்னும் ஒதுக்குவேன் ‘’ என அறிவித்துள்ளார்.