வரதட்சணைக்குக் கூட விளக்கம் கேட்ட வருமானவரித் துறை : குமுறும் விவேக்!
கடந்த 9 ஆம் தேதி, சசிகலாவின் குடும்பத்தைச் சேர்ந்த பலரது வீட்டில் வருமான வரித்துறை அதிரடியாக சோதனை நடத்தியது.
இதில் ஜெயா டிவி நிர்வாகி விவேக் வீடும் அடங்கும். இந்நிலையில் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய ஜெயா டிவி நிர்வாகி விவேக் வருமானவரி சோதனை குறித்து விளக்கம் அளித்தார்.
மேலும் கணக்கு வழக்கு விவரங்களை வருமானவரித்துறையினரிடம் தெரிவித்துள்ளதாகவும். ஜெயா டிவி நிறுவனம் தொடர்பான ஆவணங்கள் குறித்து கேட்டதாகவும் அவர் தெரிவித்தார். அதே போல் தன் மனைவிக்கு திருமணத்தின் போது வழங்கப்பட்ட வரதட்சணை நகைகள் குறித்து வருமானவரித்துறை அதிகாரிகள் கேட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
விவேக் பேட்டி