காங்.கில் இல்லாமல் காமராஜருக்கு மரியாதை செலுத்தி அரசியல் பயணத்தை தொடரும் விஷால்! (வீடியோ)

Vishal respect garland to Kamaraj statue
First Published Dec 4, 2017, 1:13 PM IST | Last Updated Sep 19, 2018, 3:18 AM IST



நடிகர் விஷால் ஏற்கெனவே  நடிகர் சங்கம் தேர்தல், தயாரிப்பாளர் சங்கம் தேர்தல் என இரண்டு தேர்தல் களத்தில் கால் பதித்து வெற்றி பெற்று விட்டதாலோ  என்னவோ தற்போது மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா நின்று வெற்றி பெற்ற ஆர்.கே.நகர்  தொகுதி இடைத் தேர்தல் களத்திலும் கால் பதிக்க உள்ளார்.

இந்தத் தேர்தல் களத்தில் ஆளும் கட்சியான அதிமுக சார்பில், மதுசூதனன் போட்டியிடுகிறார்... திமுக சார்பில் மருது கணேஷ்... டிடிவி தினகரன், ஜெ .தீபா மற்றும் சுயேட்சை  வேட்பாளர்கள் என இந்தப் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது.

ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிட இன்று மனு தாக்கல் செய்ய உள்ள விஷால்... காங்கிரஸ் கட்சியைச் சேராதவராக இருந்தும் காலை 9 மணி அளவில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

வீடியோ காட்சி: