விஷாலில் அரசியல் ஆசைக்கு ஆப்பு வைத்த அதிகாரி... நிராகரிப்பால் நிராசையானது..! (வீடியோ)
, அதே நினைப்புடன் ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலிலும் குதித்தார். இவரின் அரசியல் ஆசை ஒரு சிலருக்கு சிறுபிள்ளைத்தனமாகத் தெரிந்தாலும் பலர், ஆதரவு தெரிவித்து வந்தனர்.
ஆனால், விஷாலை முன்மொழிந்தவர் கையெழுத்திலும், சொத்து விவரங்கள் கொடுத்ததிலும் சில குளறுபடிகள் இருந்ததாகக் கூறி இவரது மனுவை தேர்தல் அதிகாரி ஏற்க மறுத்து விட்டார்.
இந்நிலையில் விஷால் தன் பக்கத்தில் இருக்கும் நியாயங்களை எடுத்துக் கூறி, தேர்தல் அதிகாரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின் விஷால் ஆதரவாளர்கள் ஒன்று கூடி விஷாலின் தேர்தல் மனுவை ஏற்கக் கூறி தர்ணா போராட்டமும் நடத்தினர்.
பின் இவருடைய மனுவை ஏற்றுக்கொள்வதாகக் கூறிய அதிகாரி திடீர் என ஏற்க மறுத்துவிட்டார். இதற்கு விஷால், நான் வெற்றி பெறா விட்டாலும், சுயேச்சை வேட்பாளர் ஒருவரை வெற்றிபெற வைப்பேன் என ஆவேசமாகக் கூறினார்.
இது குறித்த வீடியோ தொகுப்பு: