Asianet News TamilAsianet News Tamil

நடிகர் சங்கத் தேர்தலையே இணைந்து சந்திக்காதவர்கள்... ரஜினி, கமலை விளாசிய விஜயகாந்த் மகன்!

“தேமுதிக தொடங்கியபோது தனித்துதான் போட்டியிட்டது. அதனால் தேர்தல் நேரத்தில் கட்சியின் நிலைப்பாட்டை கட்சி தலைமை அறிவிக்கும். கூட்டணியாக இருந்தாலும் சரி,  தனித்து போட்டியிட்டாலும் சரி, அதைச் சந்திக்க தயாராக இருக்கிறோம். ராஜ்யசபா உறுப்பினர் சீட்டை அதிமுகவிடம் கேட்டுள்ளோம். இனி என்ன நடக்கும் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்." 

Vijayakanth son Vijaya prabakaran attacked rajini and kamal
Author
Chennai, First Published Mar 1, 2020, 10:08 PM IST

ரஜினியும் கமலும் இணைந்து ஒன்றாக நடிகர் சங்க தேர்தலையே சந்தித்தில்லை என்று தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் விமர்சனம் செய்துள்ளார்.Vijayakanth son Vijaya prabakaran attacked rajini and kamal
அண்மைக் காலமாக ரஜினியை விமர்சிக்கத் தொடங்கியுள்ளது தேமுதிக. வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் அக்கட்சியின் பொருளாளர் ரஜினியை விமர்சித்துவருகிறார். இந்நிலையில் ரஜினியை மட்டுமல்லாமல், அவரோடு சேர விரும்பும் கமலையும் சேர்ந்து விமர்சித்திருக்கிறார் விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரன். சென்னை மணப்பாக்கத்தில் தேமுதிக சார்பில் அக்கட்சியின் கொடி நாள் விழா நடைபெற்றது.இந்த விழாவில் பங்கேற்ற விஜய பிரபாகரம் அதிரடியாகப் பேசினார்.

Vijayakanth son Vijaya prabakaran attacked rajini and kamal
 “தற்போது விஜயகாந்த் கெத்தா, சூப்பராக இருக்கிறார். அத்திவரதர் வைபவத்டால் எப்படி பிரளயம் ஏற்பட்டதோ அதுபோல் தமிழக அரசியலில் விஜயகாந்தின் வருகை பிரளயத்தை ஏற்படுத்தும். குகைக்குள் இருந்தாலும் சிங்கம் எப்போதுமே சிங்கம்தான்.  நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் விரைவில் வர உள்ளதால் தைரியமாக இருங்கள். இனி தேமுதிகவுக்கு ஏறுமுகம்தான். உள்ளாட்சித் தேர்தல் வெற்றியை விஜயகாந்த்திடம் நாம் சமர்ப்பிக்க வேண்டும். அதேபோல 2021-ல் சட்டப்பேரவைத் தேர்தல் வரும்போது எல்லா தொகுதிக்கும் வந்து விஜயகாந்த் எழுச்சியை உருவாக்குவார். நாம் எல்லோரும் சேர்ந்து சிம்மாசனத்தில் விஜயகாந்த்தை உட்கார வைக்க பாடுபடுவோம்" என்று கட்சித் தொண்டர்களுக்கு உற்சாகமூட்டும் வகையில் பேசினார்.

Vijayakanth son Vijaya prabakaran attacked rajini and kamal
பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “தேமுதிக தொடங்கியபோது தனித்துதான் போட்டியிட்டது. அதனால் தேர்தல் நேரத்தில் கட்சியின் நிலைப்பாட்டை கட்சி தலைமை அறிவிக்கும். கூட்டணியாக இருந்தாலும் சரி,  தனித்து போட்டியிட்டாலும் சரி, அதைச் சந்திக்க தயாராக இருக்கிறோம். ராஜ்யசபா உறுப்பினர் சீட்டை அதிமுகவிடம் கேட்டுள்ளோம். இனி என்ன நடக்கும் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம். ஒப்பந்தம் போட்டபோது என்ன பேசப்பட்டது என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும். ஆளாளுக்குப் பேசினால் தேவையில்லாத குழப்பமும் சர்ச்சையும்தான் ஏற்படும்.Vijayakanth son Vijaya prabakaran attacked rajini and kamal
ரஜினியும் கமலும் இணைந்து ஒன்றாக நடிகர் சங்க தேர்தலையே சந்தித்தில்லை. மக்கள் மன்றத்தில் நடிகர்கள் யார் வேண்டுமானாலும் வந்து நிற்கலாம்; ஜெயிக்கலாம். ஆனால், நல்ல மனசு இருந்து மக்களுக்கு ஏதாவது செய்திருக்க வேண்டும். ரஜினியும் கமலும் மக்களுக்கு என்ன செய்தார்கள் என்பது கேள்விக்குறிதான். விஜயகாந்த் செய்துள்ளதை நான் பார்த்துள்ளேன். ரஜினியும் கமலும் சேர்ந்து ஏதேனும் செய்தால் செய்யட்டும். அது அவர்களுடைய முடிவு.” என்று விஜயபிரபாகரன் தெரிவித்தார்.

Follow Us:
Download App:
  • android
  • ios