கொரோனா அதிரிபுதிரி கிளப்பி வரும் நிலையில் மக்களை காப்பாற்ற ஒருபுறம் களமிறங்கி உள்ள நிலையில், இதில் ஸ்கோர் செய்வது யார் என்கிற உள்கட்சி கோதா அதிமுகவில் அரங்கேறி அதிர்ச்சியை கிளப்பி இருக்கிறது. 

வாயைக் கொடுத்து விருதுநகர் மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி நீக்கப்பட்ட பரபரப்பு அடங்குவதற்குள் அதைவிட பல மடங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தக் கூடிய சம்பவம் அதிமுகவில் பூதகாரமாக வெடித்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

 

 கொரோனா பாதிப்பில் இருந்து தமிழக மக்களை காப்பாற்ற சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் படு சுறுசுறுப்பாக  செயல்பட்டு வந்தார் இயங்கி வந்தார், இதுவரை அதிமுகவை விமர்சனம் செய்துவந்த பலரும் விஜய பாஸ்கரின் செயல்பாட்டினை பாராட்டி நன்றி தெரிவித்து வந்தனர்.

மேலும் அவரது ட்விட்டர் பதிவுகளும் பெரிய அளவில் பகிரப்பட்டன, இந்த சூழலில்தான் எடப்பாடி பழனிசாமி விஜயபாஸ்கர் இருவருக்கும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் நேரடி மோதல் நிகழ்ந்துள்ளது, அப்போது இனி ஊடகத்தை சந்திக்காதீர்கள் அதுகுறித்து சுகாதார செயலாளர் பார்த்து கொள்வார் நீங்கள் டெண்டர் பணியை பாருங்கள் என்று கூறியிருக்கிறார்.

சற்று அதிர்ச்சி அடைந்த விஜயபாஸ்கர் அப்போது ஏன் பணியை செய்தால் பாராட்டு வருவது குற்றமா இது ஒரு தவறா, ஏற்கனவே கட்சியின் பல சீனியர்களை நீங்கள் ஓரம்கட்ட நினைத்ததும், அதன்படி ஊடகத்தை சந்தித்த ராஜேந்திரபாலஜியை நீக்கியதும் அனைவருக்கும் தெரியும் இது உங்கள் ஆட்சியில்லை அம்மாவுடையது, கூவத்தூரில் இந்த ஆட்சியை காப்பாற்றிய பொறுப்பு எனக்கும் இருக்கிறது என்று பேசியுள்ளார்.

அதன் பிறகு வெளியே வந்தவர் நேரடியாக தனது வீட்டிற்கு செபெற்றுவிட்டார் இதனையடுத்துதான் நேற்று இரவு தன்னைப்பற்றி பாராட்டி யாரும் மீம்ஸ் போடவேண்டாம் என்று கூறியிருக்கிறார், இதனையடுத்து நேற்று துணை முதல்வர் பன்னீர் செல்வம் கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டை அரசு அதிகாரிகளுடன் சென்று ஆய்வு நடத்தியுள்ளார், இந்த தகவலும் வெளிவரக்கூடாது என உத்தரவு போடப்பட்டுள்ளார் எடப்பாடி. இதனை அறிந்து கொண்டு தேனி புறப்பட்டு சென்றுவிட்டார் ஓ.பி.எஸ். சுருக்கமாக சொல்லப்போனால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தன்னை மற்றுமொரு ஜெயலலிதாவாக நினைத்து இவ்வாறு செயல்படுவதாக கூறப்பட்டது. 

ஆனால் இந்த மோதலை இன்று நடைபெற்ற சம்பவங்கள் உறுதி செய்துள்ளன. இன்று மாலை முதல்வர் எடப்பாடி கொரோனா குறித்து ஆலோசனை நடத்த ஆளுநரை அவரது மாளிகையில் சென்று சந்திக்கச் சென்றார். அப்போது தலைமை செயலாளர் சண்முகம், சுகாதார செயலாளர் பீலா ராஜேஷ் ஆகியோரை மட்டும் அழைத்து சென்றார். 

ஒரு முக்கியமான ஆலோசனைக்கு சென்ற போது அமைச்சர் விஜயபாஸ்கரையும் சுகாதார துறை அமைச்சர் என்கிற ரீதியில் அழைத்து சென்றிருக்க வேண்டும். ஆனால், பீலா ராஜேஷை உடன் அழைத்து சென்ற எடப்பாடி விஜயபாஸ்கரை அழைத்துச் செல்லவில்லை. ஆனால், அவர்கள் ஆளுநரை சந்தித்த அதேவேளை இரண்டு நாட்களாக அமைதி காத்து வந்த விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்து கொரோனா குறித்து விளக்கம் அளித்தார். ஆக, விஜயபாஸ்கருக்கும், எடப்பாடியாருக்கும் நீருபூத்த நெருப்பாக இருந்த மோதல் யுத்தம் இப்போது வெடித்து பூதாகரமாக கிளம்பியுள்ளது.