தண்ணீருக்குள் டார்ச் அடித்து டெங்கு ஆய்வு செய்த விஜயபாஸ்கர் (வீடியோ)
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாக டெங்கு காச்சல் மற்றும் மர்ம காச்சல் அதிகரித்து வருகிறது.
இதன் காரணமாக பல்வேறு கிராமங்களில் தொடர்ந்து டெங்கு காய்ச்சலுக்கு 100 க்கும் மேற்பட்ட குழந்தைகள், சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் பலியாகியுள்ளனர்.
இந்நிலையில் தமிழக சுகாதார துறை அமைச்சர் விஜய பாஸ்கர், புதுப்பேட்டை பகுதிகளில் அமைந்துள்ள மார்க்கெட், வீடுகள் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது டெங்கு கொசுக்கள் உருவாகும் நல்ல தண்ணீர், மரம் மட்டைகளில் தண்ணீர் தேங்காமல் இருக்கச் செய்வது... டெங்கு காய்ச்சல் வராமல் எப்படி பாதுகாத்துக்கொள்வது என்பது பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.