Asianet News TamilAsianet News Tamil

ஜமியா பல்கலைக்கழகம் மாணவர்கள் மீது போலீஸ் தாக்குதல் நடத்தும் வீடியோ!! அதிரும் மாணவர்கள்.

ஜமியா பல்கலைக்கழகம் மாணவர்கள் மீது போலீஸ் கொடூர தாக்குதல் நடத்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த வீடியோ பார்ப்பவர்களை கொதிப்படையச் செய்கிறது.
https://twitter.com/Youth4Swaraj/status/1228900800220413957?s=20

Video of Jamia University students attacking police The vibrant students.
Author
Delhi, First Published Feb 16, 2020, 3:41 PM IST

ஜமியா பல்கலைக்கழகம் மாணவர்கள் மீது போலீஸ் கொடூர தாக்குதல் நடத்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த வீடியோ பார்ப்பவர்களை கொதிப்படையச் செய்கிறது.

Video of Jamia University students attacking police The vibrant students.

   மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக டெல்லியில் மாணவர்கள் நடத்திய போராட்டம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் தொடர்ச்சியாக நாடு முழுவதும் பலகட்டப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 15ஆம் தேதி குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி நாடாளுமன்றம் நோக்கி ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்கள் பேரணி நடத்தினர்.
அப்போது அங்கு வந்த போலீசார், அவர்களை திரும்ப செல்லுமாறு எச்சரிக்கை விடுத்தனர். ஆனாலும், மாணவர்கள் தொடர்ந்து முன்னேறிச் சென்றனர். அப்போது இருதரப்பிற்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதும், போலீஸ் தன் வேலையை காட்டி மாணவர்கள் மீது தடியடி நடத்தியது.. மாணவிகள் என்றும் பாராமல் போலீசார் மிகவும் கொடூர தாக்குதலை நிகழ்த்தியிருக்கிறது.

Video of Jamia University students attacking police The vibrant students.

இது குறித்து விளக்கம் அளித்த போலீசார், மாணவர்கள் பேரணியை விடாமல் தொடர்ந்தனர். நாங்கள் எவ்வளவோ கேட்டுக் கொண்டும் அவர்கள் கேட்கவில்லை. போராட்டக்காரர்கள் போலீசார் மீது கற்களை வீசினர். இதில் 10க்கும் மேற்பட்ட போலீசார் காயமடைந்தனர். மேலும் பொதுச் சொத்துகளுக்கும் சேதம் விளைவித்தனர். பல்கலைக்கழகத்திற்குள் நுழைந்து கொண்டு அராஜகத்தில் ஈடுபட்டனர். அதனால் தான் அங்கே  போலீசார் போகும்படியான சூழ்நிலை உருவாக்கியது.

Video of Jamia University students attacking police The vibrant students.
 
 பல்கலைக்கழக மாணவர்கள் மீது போலீசார் நடத்திய தடிஅடியில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக சிறப்பு விசாரணைக் குழுவை உருவாக்கி நீதிமன்றம் மேற்பார்வையில் விசாரணை நடத்த வேண்டும் என்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு கடந்த 11ஆம் தேதி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
இந்த நிலையில் போலீசார் ஜமியா பல்கலைக்கழகம் நூலகத்திற்குள் அமைதியாக படித்து கொண்டிருந்த மாணவர்கள் மீது போலீஸ் கண் மூடித்தனமாக தாக்கும் வீடியோ வெளியாகி இருப்பது சமூக வலைதளங்களில் ஸ்பீடாக பரவி வருகிறது.எம்.எச்.ஏ என்ன நடவடிக்கை எடுக்கும்?

 https://twitter.com/Youth4Swaraj/status/1228900800220413957?s=20
https://twitter.com/i/status/1228888864011374593

Follow Us:
Download App:
  • android
  • ios