வெற்றிவேலுக்கு பாடைக்கட்டிய அதிமுகவினர்... பரபரப்பு வீடியோ...!

தொலைக்காட்சி பேட்டியின் போது டிடிவி ஆதரவாளர் வெற்றிவேல், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை ஒருமையில் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது உருவபொம்மை எரித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

First Published Oct 8, 2018, 4:35 PM IST | Last Updated Oct 8, 2018, 4:42 PM IST

தொலைக்காட்சி பேட்டியின் போது டிடிவி ஆதரவாளர் வெற்றிவேல், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை ஒருமையில் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது உருவபொம்மை எரித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.  அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொது செயலாளர் டிடிவி தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல், கடந்த சில தினங்களுக்கு முன்பு, தனியார் செய்தி சேனல் ஒன்றில் பேட்டி அளித்தார். பல்வேறு கேள்விகளுக்கு வெற்றிவேல் பதிலளித்தார்.

 பேட்டியின்போது வெற்றிவேல், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை தகாத வார்த்தைகளாலும், அவதூறாகவும், ஒருமையிலும் பேசி இருந்துள்ளார். அவரது இந்த பேச்சைக் கண்டித்து, சென்னை கொளத்தூர் பகுதி அதிமுக நிர்வாகி கிருஷ்ணமூர்த்தி தலைமையில், காவல் ஆணையரிடம் அளிக்கப்பட்டது.

இதன் பின்னர், கொளத்தூர் அகரம் சந்திப்பில், வெற்றிவேலின் உருவபொம்மையை உருவபொம்மையை செருப்பால் அடித்தும், எரித்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், ஆர்ப்பாட்டக்காரர்களை கலைந்து செல்லும்படி கூறினர்.போலீசாரின் அறிவுறுத்தலின்படி, ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்து சென்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள், பெண்கள் என 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தால் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.