நெல்லை மேலப்பாளயத்தில் நடைபெற்ற கூட்டத்தில் நெல்லை கண்ணன் மோடி, அமித் ஷாவை பற்றி சர்ச்சையாக பேசும் நிகழ்ச்சியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகனும் கலந்து கொண்டு சர்ச்சையாக பேசி இருந்தார். அவரையும் கைது செய்ய வேண்டும் என பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இந்நிலையில், வன்முறையை தூண்டும் வகையில் பேசி வரும் ஹெச்.ராஜாவை கைது செய்யவில்லை என்றால் அறிவிப்பின்றி மெரினாவில் குவிந்திடுவோம் என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் எச்சரித்துள்ளார். தமிழறிஞர் நெல்லை கண்ணன் கைது தொடர்பாக சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு அவர் இதனைக் கூறினார். மேலும், நேரம் குறிப்பிடாமல், நாள் குறிப்பிடாமல் மெரினாவில் திரண்டு ஹெச்.ராஜாவை கைது செய்யக்கோரி போராட்டம் நடத்துவது உறுதி என அவர் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து நெல்லையில் போராட்டத்தில் ஈடுபட தனது ஆதரவாளர்களுடன் முயன்றார் வேல்முருகன்.

 


அப்போது அவரது ஆதரவாளர்கள் போலீஸ்வேன் கண்ணாடிகளை உடைத்ததாக கூறப்படுகிறது. இதனால் வேல்முருகன் ஆதரவாளர்கள் மீது காவல்துறையினர் கண்மூடித்தனமாக தாக்கியதால் அவர்கள் தலைதெறிக்க ஓடினர். கூட்டத்தில் இருந்த வேல்முருகன் வேன் அருகில் மரண பயத்தில் ஒதுங்கிக் கொண்டார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.