Asianet News TamilAsianet News Tamil

சி.ஏ.ஏவுக்கு ஆதரவாக வாலண்டரியாக வண்டியேறும் வேலூர் இப்ராஹிம்... ப்ரேக் போட்டு அதிர்ச்சி கொடுத்த போலீஸ்..!

தமிழ்நாடு ஏகத்துவ பிரசார ஜமாத் தலைவர் இப்ராஹிம் எந்த மாவட்டத்திற்கு சென்றாலும் அங்குள்ள பாஜக கட்சி அனுதாபிகளை சந்தித்துவிட்டு, குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக பேசுவதுதான், இந்த கொந்தளிப்பிற்கு காரணம்.

Vellore Ibrahim volunteers to support the CAA
Author
Tamil Nadu, First Published Mar 13, 2020, 5:32 PM IST

குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் வலுத்து வரும் நிலையில், வேலூரை சேர்ந்த தமிழ்நாடு ஏகத்துவ பிரசார ஜமாத் தலைவர் இப்ராஹிம் குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவாகவே பேசுவேன்'' என்று அடம்பிடித்து வருகிறார்.

 Vellore Ibrahim volunteers to support the CAA

அதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சென்று, போராடுபவர்களை போலீசார் விரட்ட வேண்டும் என்று கலெக்டரிடம் கோரிக்கை வைத்து வருகிறார். அது அவருடைய கருத்து சுதந்திரம் என்று அமைதி காத்த போராட்டக்காரர்கள் இப்போது கொந்தளிக்கிறார்கள். தமிழ்நாடு ஏகத்துவ பிரசார ஜமாத் தலைவர் இப்ராஹிம் எந்த மாவட்டத்திற்கு சென்றாலும் அங்குள்ள பாஜக கட்சி அனுதாபிகளை சந்தித்துவிட்டு, குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக பேசுவதுதான், இந்த கொந்தளிப்பிற்கு காரணம்.Vellore Ibrahim volunteers to support the CAA

நேற்று முன்தினம் சேலம் மாவட்டத்திற்கு வந்தவர், பாஜக கட்சியில் இருந்து அதிமுகவுக்கு தாவிய பிரமுகர் ஒருவருடன் ஆலோசித்துள்ளார். பிறகு போராட்டம் நடக்கும் இடத்திற்கு சென்று விளக்க நோட்டீஸ் கொடுப்பதற்கு ஆயத்தமாகியுள்ளார். அந்த நேரத்தில் போலீசார், ’நிலைமை இப்போது சரியில்லை. அதனால் ஸ்பாட்டுக்கு நீங்கள் போக வேண்டாம்’என்று பிரேக் போட்டிருக்கிறார்கள். பின்னணியில் இருப்பவர்கள் யாரென்று தெரிந்து விட்டது.. இனி வேறு வழியில்லை என்று இப்ராஹிம் பேசாமல் கிளம்பி இருக்கிறார். 

Follow Us:
Download App:
  • android
  • ios