தமிழகத்தில் அதிமுக தலைமையில் அமைக்கப்பட்டுள்ள கூட்டணியில் பாஜக, பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. அதே நேரத்தில் தேமுதிகவை கூட்டணிக்குள் கொண்டு வருவதற்குள் அதிமுகவுக்கு போதுப் போதும் என்று என்றாகிவிட்டது.

அதிமுகவே கடைசியில் தேமுதிக கழற்றிவிட்டு விலாம் என பிளான் பண்ணியபோது தான் பாஜக உள்ளே புகுந்து பேச்சு வாத்தை நடத்தி தேமுதிகவை உள்ளே கொண்டு வந்தது. 

தற்போது அதிமுக கூட்டணியில் பாமக 7, பாஜக 5, தேமுதிக 4, புதிய நீதி கட்சி 1, புதிய தமிழகம் 1. என்.ஆர்.காங்கிரஸ் 1 மற்றும் அதிமுக 20 தொகுதிகளில் போட்டியிடுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

மீதமுள்ள அந்த ஒரு தொகுதியை வாசனின்  தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்குவது என் தீர்மானிக்கப்பட்டது. இது தொடர்பாக பல கட்ட பேச்சு வார்த்தை நடைபெற்றது. 

மேலும் பழசை மறக்க கூடாது என்ற ஒரே காரணத்துக்காக அதிமுகவிலேயே மீண்டும் வாசன் கூட்டணி வைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தொடர்ந்து இழுபறியே நீடித்து வருகிறது.

மோடி சென்னை வந்த அன்று அந்த மேடையில் விஜயகாந்த் படம், கொடிகள் இறக்கியும், ஏற்றியும் வைக்கப்பட்டு கசமுசா ஆனதோ, அதேபோன்று சம்பந்தமே இல்லாமல் அந்த படங்கள், கொடிகளுடன் ஏடாகூடமானது வாசனின் படமும், கொடியும் இருந்தது. பின்னர் அது அகற்றப்பட்டது.

எப்படியும் தமாகா அதிமுகவுடன் அணி சேரும் என்றே நினைக்கப்பட்டாலும், வாசனுக்கு ஒன்றுதான் என்பதும் அதுவும் மயிலாடுதுறை மட்டும்தான் ஒதுக்க முடியும் என்பதும் அதிமுகவின் முடிவு. அதுவும் அவர் இரட்டை இலை சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும் என அதிமுக கண்டிசன் போட்டது.

ஆனால் வாசன் 3 தொகுதிகள் வேண்டும் என தொடர்ந்து பிடிவாதம் பிடித்து வருகிறார்.

ஏற்கனவே  தேமுதிகவில் இழுபறி என்றதும், அந்த கூட்டணிக்கு 3 தான் தரப்படும் என்ற செய்திகள் பரவியதும் எப்படியும் தனக்கு 3 சீட்டுகள் கன்பார்ம் என்றுதான் வாசன் நினைத்தார். எவ்வளவுக்கெவ்வளவு தேமுதிகவுக்கு சீட் குறைகிறதோ அவ்வளவும் தனக்குதான் என்றும் கணக்கு போட்டார்.  

ஆனால் தேமுதிகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு விட்டதால் வாசன் அப்கெட்டில் உள்ளார். தற்போது 1 தொகுதிதான் என அதிமுக முடிவாக சொல்லிவிட்டதால் கையைப் பிசைந்து கொண்டிருக்க்றார்.

அதே நேரத்தில் கூட்டணியில் சேர்த்துக் கொள்வோம் என உறுதி அளித்துவிட்டு தற்போது வாசன் முரண்டு பிடிப்பதால் அதிமுகவும் பெரும் சங்கடத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால் ஒத்த கருத்து ஏற்பட்டால் மட்டுமே, அதிமுகவுடன் கூட்டணி. அது சம்பந்தமாக இல்லையென்றால் தனித்துப் போட்டி என உரக்கச் சொல்கிறார் வாசன்.