Asianet News TamilAsianet News Tamil

குப்பை தொட்டியில போயி விழுவீங்க! ஜாக்கிரத: வைகோ மிரட்டியது யாரை?

*    தமிழக பா.ஜ.க.வில் கோஷ்டிப் பூசல் இருப்பதாக சொல்லப்படுவது முழு பொய். தற்போது உள்ளாட்சி தேர்தலில் கவனம் செலுத்த வேண்டி இருப்பதால், தலைவர் நியமனம் தற்காலிகமாக தள்ளிப் போயுள்ளது. இங்கே மட்டுமல்ல நாட்டில் மேலும் சில மாநிலங்களில் தலைவர் பதவி காலியாக உள்ளது. மேலும், மார்கழி மாதத்தில் இது போன்ற முக்கிய பதவிக்கான அறிவிப்பு வெளியாகாது.
 

vaiko strict warring for famous person
Author
Chennai, First Published Dec 20, 2019, 8:14 PM IST


*    தமிழக பா.ஜ.க.வில் கோஷ்டிப் பூசல் இருப்பதாக சொல்லப்படுவது முழு பொய். தற்போது உள்ளாட்சி தேர்தலில் கவனம் செலுத்த வேண்டி இருப்பதால், தலைவர் நியமனம் தற்காலிகமாக தள்ளிப் போயுள்ளது. இங்கே மட்டுமல்ல நாட்டில் மேலும் சில மாநிலங்களில் தலைவர் பதவி காலியாக உள்ளது. மேலும், மார்கழி மாதத்தில் இது போன்ற முக்கிய பதவிக்கான அறிவிப்பு வெளியாகாது.
-    வெங்கடேசன் (பா.ஜ.க.வின் S.C.பிரிவு தலைவர்)

*    அண்டை நாடுகளில் இருந்து இந்தியாவினுள் வரும் இந்து அகதிகள், நம் நாட்டில் எங்கே குடியமர்த்தப்படுவர்? இதற்கான திட்டம் எதுவும் மத்திய அரசிடம் உள்ளதா? பசுக்கள் தொடர்பாக, சாவர்க்கரின் இந்துத்வா கொள்கை குறித்து பா.ஜ.க. தன் நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும். 
-    உத்தவ் தாக்கரே (மஹாராஷ்டிரா முதல்வர்)

*    இந்தியாவில் அமைதி நிலவுவத விரும்பாத சில சக்திகள், நேபாளம் மற்றும் பூடான் வழியாக நம் நாட்டிற்குள் ஊடுருவ முயற்சிக்கின்றன. இந்த எல்லை பகுதிகளில் மைனஸ் 37 டிகிரி குளிரில் ‘எஸ்.எஸ்.பி’படையினர், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்களால்தான் நாட்டின் 130 கோடி மக்கள் அமைதியாக உறங்குகின்றனர். அடுத்த ஒன்றரை ஆண்டுகளில், எல்லை பாதுகாப்பு படையினர் குறைந்தது நூறு நாட்கள் தங்கள் குடும்பட்துடன் வசிக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். 
-    அமித்ஷா (உள்துறை அமைச்சர்)

*    பெண்கள் மீது கை வைப்பதும், போலீஸ் மீது கை வைப்பதும் ஒன்றுதான். பெண்களுக்கு ஆடை கட்டுப்பாடு அவசியம் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. அது, தன்மனித சுதந்திரம். ஆனால் பெண்கள் எப்போதும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பெண்கள் மற்றும் குழந்தைகளிடம் தவறாக நடக்க முயலும் ஆண்களைப் பந்தாடுங்கள். தற்காப்புக்காக அடிக்கவும், உதைக்கவும் உங்களுக்கு சட்டத்தில் இடம் உண்டு. மானபங்கம் செய்பவரை பெண்கள் சுட்டு தள்ளினாலும் அது குற்ரமாகாது.
-    ரவி (குற்றத் தடுப்பு பிரிவு கூடுதல் டி.ஜி.பி.)

*    நானும் அஞ்சலியும் காதலிக்கிறோம், கல்யாணம் செய்து கொள்வோம்! என்று சிலர் தகவல்களை பரப்புகின்றனர். அது உண்மையில்லை. நாங்கள் நண்பர்கள் மட்டுமே. எங்களுக்குள் நட்பு மட்டுமே உள்ளது. வேறு பெண்ணை தான் திருமணம் செய்வேன். அந்தப் பெண் யார்? என விரைவில் தெரிவிப்பேன்.
-    ஜெய் (நடிகர்)

*    படைகள் மூலம் மக்களின் குரலை நசுக்கிட முடியாது. ஒவ்வொரு முறை அடக்குமுறையை அரசு கையிலெடுக்கும் போதும், மக்கள் அதிக வீரியத்துடன் எழுந்து வருகின்றனர். அதிக பலத்துடன், அவர்களுடைய போராட்டம் வேகமெடுக்கிறது. 
-    பிரியங்கா காந்தி (காங்கிரஸ் பொதுச்செயலர்)

*    பா.ம.க. இளைஞரணி தலைவரும், ராஜ்யசபா எம்.பி.யுமான அன்புமணியை இதுவரையில் நான் பார்லிமெண்டில் பார்த்ததே இல்லை. பெரும்பாலும் அவர் வருவதே இல்லை. ஆனால், குடியுரிமை மசோதா ஓட்டெடுப்புக்கு வந்து, சத்தம் காட்டாமல் அந்த மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்து சென்றுள்ளார். 
-    கனிமொழி (தி.மு.க. எம்.பி.)


*    குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவானது ஈழத் தமிழர்களுக்கு மட்டுமல்ல, நாட்டின் ஜனநாயகம், மனித குலம், தேச ஒருமைப்பாட்டிற்கும் முற்றிலும் எதிரானது. முஸ்லிம் நாடுகளில் பலவற்றில் வசிக்கும் இந்துக்களுக்கு , குடியுரிமை கிடையாது! என விரட்டி அடித்தால், அதை ஏற்க முடியுமா? அது போன்றதுதான் இதுவும். 

*    குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக நாடு முழுவதும் மாணவர்கள் மற்றும் அனைத்து பிரிவினரும் வெகுண்டெழுந்துள்ளனர். இது இரண்டாவது சுதந்திர போராக மாறியுள்ளது. அதை அடக்க, மத்திய அரசு மேற்கொள்ளும் முயற்சி, போராட்டத்தை தீவிரப்படுத்துமே தவிர மந்தப்படுத்தாது. 
-    திருமாவளவன் (சிதம்பரம் தொகுதி எம்.பி.)

*    நாங்கள் வைத்ததுதான் சட்டம், எங்களை யாரும் அசைக்க முடியாது! என சர்வாதிகாரிகள் கடந்த காலங்களில் குரல் கொடுத்துள்ளனர். அவர்கள் எல்லாம் வரலாற்றின் குப்பைத் தொட்டியில் தூக்கி எறியப்பட்டுள்ளனர். அதே போன்ற நிலைதான் தற்கால சர்வாதிகாரிகளுக்கும் வரும். 
-    வைகோ (ம.தி.மு.க பொதுச்செயலர்)

Follow Us:
Download App:
  • android
  • ios