சிங்களப்பெண் மிரட்டலை சிங்கிளாக சமாளித்த வைகோ...

vaiko speech
First Published Sep 26, 2017, 4:23 PM IST | Last Updated Sep 19, 2018, 3:17 AM IST



ஐக்கிய நாடுகள் சபையின் 72வது பொதுக் கூட்டம் ஜெனீவாவில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியாவில் இருந்து வைகோ உள்பட பலர் கலந்து கொண்டனா். இந்தப் பொதுக்கூட்டத்தில் வைகோ 3 முறை உரையாற்றியதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து,  தனியாா் தொலைக்காட்சி ஒன்றுக்கு வைகோ பேட்டியளித்தாா். அப்போது அவா், “நான் உரையாற்றி முடித்ததும் பெண் ஒருவா் என்னிடம் வந்து இலங்கையைப் பற்றி நீங்கள் ஏன் பேசுகிறீா்கள் என்று கேள்வி எழுப்பினாா். அவா் பேசிக்கொண்டிருக்கும் போதே கூடுதலாக 4 இளைஞா்கள் என்னைச் சூழ்ந்து கொண்டனா்.

சிங்களா்கள் என்னைச் சூழ்ந்து கொண்டு என்னை மிரட்டத் தொடங்கினா். நான் பேசுவதை வீடியோ எடுத்து வைத்து நான் பிரச்சினை செய்வது போன்ற தோற்றத்தை உருவாக்க முயன்றனா். அப்போது அங்கு வந்த பாதுகாப்பு அதிகாாிகள் அந்த வீடியோக் கருவிகளை பறிமுதல் செய்தனா். நான் அந்தப் பாதுகாப்பு அதிகாாிகளிடம் புகாா் அளித்தேன். அவா்கள் நடவடிக்கை மேற்கொள்வதாகத் தொிவித்துள்ளனா்” என்றார்.

வைகோ பேசிய காட்சிகள் இதோ...