தீக் குளித்த இசக்கி முத்துவை சந்தித்துப் பேசிய வைகோ (வீடியோ)

vaiko meet isaki muthu
First Published Oct 24, 2017, 6:58 PM IST | Last Updated Sep 19, 2018, 3:17 AM IST



கந்து வட்டி கடன் சுமை காரணமாக நேற்று நெல்லை மாவட்டம் காசிதர்மத்தில் வசித்த  ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் திடீர் என யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் ஆட்சியர் அலுவலகம் முன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டனர்.

இந்தக் கொடூரச் சம்பவத்தில், இசக்கிமுத்துவின் மனைவி மற்றும் குழந்தைகள் இரண்டு பேர், சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தனர். இசக்கிமுத்து  மட்டும் தற்போது 70 சதவீத தீக் காயங்களுடன் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் இவரை மதிமுக தலைவர் வைகோ மருத்துவமனைக்குச் சென்று சந்தித்துப் பேசினார். அப்போது இசக்கிமுத்துவிடம் என்ன பிரச்சனை என்ன காரணத்திற்காக தீ வைத்துக்கொண்டார் என மிகவும் அன்பாகப் பேசினார். 

மேலும் உனக்கு விரைவில் குணமாகிவிடும் என்றும் ஆறுதல் கூறினார். அப்போது இசக்கிமுத்து வைகோவிடம் தண்ணீர் தாகமாக உள்ளது என கேட்க உடனே அவருக்கு தண்ணீர் கொடுத்து தாகத்தை தீர்த்து வைத்தார்.

அந்த வீடியோ காட்சி இதோ...