திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டத்துக்கு புதிய நிர்வாகிகளை நியமித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.

அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் பல்வேறு மாவட்டங்களுக்கு புதிய நிர்வாகிகளை நியமித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டத்துக்கு அவர் நியமித்துள்ள முக்கிய நிர்வாகிகள் விவரம் வருமாறு:-

திருவள்ளூர் மேற்கு மாவட்ட அ.ம.மு.க. அவைத் தலைவராக சத்திய மூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார். மாவட்ட இணை செயலாளராக ராதா நியமிக்கப்படுகிறார். துணைச்செயலாளர்களாக அய்யப்பன், திலகவதி ஆகியோரும், பொருளாளராக ரவிக்குமாரும் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுக்குழு உறுப்பினர்களாக அருண்குமார், செந்தில்குமார், அசேன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். அ.ம.மு.க. ஜெயலலிதா பேரவை செயலாளராக நடராஜன், எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளராக அப்பாஸ், மகளிர் அணி செயலாளராக செல்வகுமாரி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மாணவர் அணி செயலாளராக ராஜேஷ், வழக்கறிஞர் பிரிவு செயலாளராக ஸ்ரீதர் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்கள். சிறுபான்மை நலப்பிரிவு செயலாளராக பீர்முகமது, விவசாய பிரிவு செயலாளராக பாலு ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை, தகவல் தொழில் நுட்ப ஆண்கள் பிரிவு, வர்த்தக அணி, நெசவாளர் அணி ஆகியவற்றுக்கும் செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒன்றிய செயலாளர்கள் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. இதுபோல் திருச்சி தெற்கு, மதுரை புறநகர் வடக்கு, மதுரை புறநகர் தெற்கு, திண்டுக்கல் கிழக்கு மாவட்டங்களுக்கும் பல்வேறு பதவிகளுக்கு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.