அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் ஒரு ஃபிராடு. சசிகலாவின் பணத்தை ஆட்டையை போட்டவர் என அதிமுகவைச் சேர்ந்த புகழேந்தி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். 

டிடிவி.தினகரனின் தீவிர ஆதரவாளராக இருந்த பெங்களூரு புகழேந்தி சமீபத்தில் தாய் கழகமான அதிமுகவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் இணைந்தார். இதனையடுத்து, அவ்வப்போது, டிடிவி.தினகரனை 20 ரூபாய் டோக்கன் என்று பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். இந்நிலையில், புகழேந்தி கோவையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விவசாயிகளுக்கு பல்வேறு சிறப்பு திட்டங்களை அறிவித்து சிறப்பான ஆட்சியை செய்து வருகிறார். ஆனால், டி.டி.வி தினகரன் கட்சி என்ற பெயரில் காமெடி செய்து வருகிறார். சின்னம் இல்லாமல் அவர் அலைந்துகொண்டிருக்கிறார். தென் மாவட்டங்களில் முக்குலத்தோர் பெயரைச் சொல்லி டிடிவி.தினகரன் ஓட்டு வாங்க முடியாது.

இதையும் படிங்க;-  கள்ளக்காதலியுடன் உல்லாசம்... மனைவி மீது தீராத வெறுப்பு... குடும்பத்தினர் சேர்ந்து செய்த கொடூர செயல்..!

சசிகலா சிறையில் இருந்து வந்தால் அதிமுகவில் எந்த மாற்றமும் நடக்காது. சிறையில் இருந்து வெளிவரும் சசிகலா அரசியலுக்கு வரமாட்டார். நேராக வீட்டுக்குப் போய் ஓய்வெடுப்பார். டி.டி.வி.தினகரன் சசிகலாவை பிளாக் மெயில் செய்கிறார். சிறையில் உள்ள சசிகலாவை யாரையும் சந்திக்கவிடுவதில்லை. , டிடிவி.தினகரன் ஒரு ஃபிராடு. சசிகலாவின் பணத்தை ஆட்டையை போட்டுவிட்டு டிராமா செய்து வருகிறார். அவர்கள் ஒருவருக்கு கூட சசிகலாவை வெளியே அழைத்துவரும் எண்ணமில்லை. டி.டி.வி தினகரன் ஒரு பசுந்தோல் போர்த்திய புலி என அவர் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். 

இதையும் படிங்க;-  கலெக்டர் ஆபீசில் அதிர்ச்சி... மனு கொடுக்க வந்த பெண்ணை உல்லாசத்துக்காக ஏற்காட்டிற்கு கூப்பிட்ட ஊழியர்..!

இதையும் படிங்க;-  சரவணா ஸ்டோர்ஸ் அலுவலகத்துக்கு சீல்... தமிழக அரசு அதிரடி நடவடிக்கை..!

மேலும், சென்னை ராயப்பேட்டையில் அமமுக தலைமை அலுவலகம் திறப்பு விழாவின் போது பேசிய டிடிவி.தினகரன் 2021-ம் ஆண்டு தேர்தலில் அமமுக தலைமையில் பெரிய கூட்டணி அமையும் என்றார். இதற்கு பதிலடி கொடுத்துள்ள புகழேந்தி டிடிவி.தினகரன் ஒரு கொரொனா வைரஸ். அவருடன் எந்தக் கட்சியும் கூட்டணி வைக்கமாட்டார்கள் என்றார். டிடிவி.தினகரனின் சொத்து மதிப்பு சுமார் ரூ.20,000 கோடி உள்ளது என தகவல் தெரிவித்துள்ளார்.