Asianet News TamilAsianet News Tamil

பீகார் தேர்தலுக்கு பயந்து என் மீது போடப்பட்ட தேசதுரோக வழக்கு.!! கண்ணையாகுமார் அதிரடி பேட்டி.!!

மாணவர் சங்கத்தின் முன்னாள் தலைவர் கண்ணையா மீது போட்டப்பட்ட தேசதுரோக வழக்கிற்கு ஒப்புதல் அளித்தது கெஸ்ரிவால் அரசு.இதை சட்டத்தின் முன் சந்திப்பேன் என்றும் ,பீகார் தேர்தலுக்காக முன்னதாகவே தான் குறிவைக்கப்ப்ட்டதாகவும் குற்றம் சாட்டியிருக்கிறார் கண்ணையா.

Treason case put on fear of Delhi election !! Kannayakumar Action Interview. !!
Author
Delhi, First Published Feb 29, 2020, 10:33 AM IST

T.Balamurukan

மாணவர் சங்கத்தின் முன்னாள் தலைவர் கண்ணையா மீது போட்டப்பட்ட தேசதுரோக வழக்கிற்கு ஒப்புதல் அளித்தது கெஸ்ரிவால் அரசு.இதை சட்டத்தின் முன் சந்திப்பேன் என்றும் ,பீகார் தேர்தலுக்காக முன்னதாகவே தான் குறிவைக்கப்ப்ட்டதாகவும் குற்றம் சாட்டியிருக்கிறார் கண்ணையா.

ஜனவரி 2019-ல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்திய நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் அஃப்சல் குருவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்து நடந்த நிகழ்வில் இந்தியாவுக்கு எதிரான முழக்கங்கள் எழுப்பப்பட்டன என்று அந்த குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டிருக்கிறது.

Treason case put on fear of Delhi election !! Kannayakumar Action Interview. !!

டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் முன்னாள் தலைவர் கன்னையா குமார், உமர் காலித், உள்ளிட்ட ஒன்பது பேர் மீதான தேசத் துரோக வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து அடுத்த கட்ட நடவடிக்கைக்குச் செல்ல டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவுக்கு டெல்லியின் ஆம் ஆத்மி அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இது குறித்து ஆங்கில செய்தி சேனலுக்கு பேட்டியளித்து பேசிய கன்னையா குமார், "இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் பீகார் மாநில சட்டமன்ற தேர்தலையொட்டி முன்னதாகவே தான் குறிவைக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியிருக்கிறார். சில வழக்குகளைச் சுட்டிக்காட்டியிருக்கிறார். கடந்த மாதம் மூன்று ஹிஸ்புல் முஜாஹிதீன் ,பயங்கரவாதிகளுடன் டெல்லிக்குச் சென்றிருந்தபோது பிடிபட்ட மூத்த ஜம்மு-காஷ்மீர் காவல்துறை அதிகாரி டேவிந்தர் சிங் மீது தேசத் துரோக வழக்கு பதியப்படாததையும் கன்னையா குமார் சுட்டிக்காட்டினார்

Treason case put on fear of Delhi election !! Kannayakumar Action Interview. !!
. தேசத் துரோக வழக்குகள் குறுகிய அரசியல் நோக்கத்திற்காகவும், ஆதாயத்திற்காகவும் பயன்படுத்தப்படுகிறது, தான் தேச விரோத முழக்கங்கள் எதையும் எழுப்பவில்லை என்றும், பீகார் சட்டப்பேரவை தேர்தலுக்கு தயாராகிக்கொண்டிருக்கின்ற சூழலில் இம்மாதிரியாக வழக்குகள் போடப்பட்டிருப்பது அரசியல் நோக்கம் கொண்டது. இந்த மாதிரியான குற்றச்சாட்டுகளை மக்கள் உணர்ந்துகொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

Treason case put on fear of Delhi election !! Kannayakumar Action Interview. !!

டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவின் விண்ணப்பத்தினை, ஒரு வருடத்திற்குப் பின்னர் ஆம் ஆத்மி கட்சி ஏன் வழக்குத் தொடர அனுமதித்தது என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் சொல்ல மறுத்துவிட்ட கண்ணையாகுமார்.ஆம் ஆத்மியின் இந்த நிலைப்பாடு குறித்துத் தான் கருத்துச் சொல்ல விரும்பவில்லை என்றும், விரைவான நீதிமன்ற விசாரணையின் மூலம் விரைவான நீதி கிடைக்கும் என்று தான் நம்புகிறேன்.  நீதித்துறை மீது தனக்கு முழு நம்பிக்கை இருப்பதாகவும், அரசியல் அழுத்தங்களுக்கு அடிபணியாமல் உரிய செயல்முறையை பின்பற்றுவதன் மூலம் நீதியை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.அவர்.

Follow Us:
Download App:
  • android
  • ios