Asianet News TamilAsianet News Tamil

வாகன ஓட்டிகளே உஷார்...!! யார் வேண்டுமானாலும் அபராதம் வாங்க முடியாது...!!

சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் என்று சொல்லப்படும் எஸ்எஸ்ஐ க்கு குறைவான அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு அபராதம் வசூலிக்க முடியாது என்று சொல்லப்பட்டுள்ளது. குறைந்த பட்சம் சிறப்பு நிலை துணை ஆய்வாளர் என்று சொல்லப்படும் எஸ்எஸ்ஐ (கிரேடு 2) க்கு நிகரான அதிகாரத்தில் உள்ள காவல் அதிகரிகள் மட்டுமே அபராதம் வசூலிக்க முடியும்

tn government release regarding road pain collection
Author
Chennai, First Published Sep 5, 2019, 7:23 PM IST

திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் விதிமீறும் வாகன ஓட்டிகளிடம்  யார் வேண்டுமானாலும் அபராதம் வசூலிக்க முடியாது என தமிழக அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது. 

tn government release regarding road pain collection

மத்திய அரசின் திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டம்  நாட்டில் பல்வேறு மாநிலங்களில் நடைமுறைக்கு வந்துள்ளது. போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுபவர்களுக்கு குறைந்தது 500 ரூபாய் முதல் அதிகபட்சமாக 25,000 ரூபாய் வரை அபராதம் வசூலிக்கும் வகையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த திட்டம் வாகன ஒட்டிகளின் வயிற்றில் புளியை கரைக்க வைத்துள்ளது. சம்பாதிக்கும் வருமானத்தில் பாதித் தொகையை அபராதமாக செலுத்த வேண்டிய நிலை வந்துவிடுமோ என்ற அச்சம் தான் அதற்கு காரணம். அந்தளவிற்கு அபராதத் தொகை மிக கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. tn government release regarding road pain collection

அபராதம் என்ற பெயரில்  முறைகேடு நடந்துவிடக்கூடாது என்பதால் அபராதத் தொகையை வசூலிப்பதற்கு தமிழக அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. யாரெல்லாம் அபராதம் வசூலிக்கமுடியும் என்பது குறித்து அரசு ஆணையொன்றை வெளியிட்டுள்ளது. அதில் விதிமீறும் வாகன ஒட்டிகளிடம் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் என்று சொல்லப்படும் எஸ்எஸ்ஐ க்கு குறைவான அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு அபராதம் வசூலிக்க முடியாது என்று சொல்லப்பட்டுள்ளது. குறைந்த பட்சம் சிறப்பு நிலை துணை ஆய்வாளர் என்று சொல்லப்படும் எஸ்எஸ்ஐ (கிரேடு 2) க்கு நிகரான அதிகாரத்தில் உள்ள காவல் அதிகரிகள் மட்டுமே அபராதம் வசூலிக்க முடியும் என்று அந்த ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சோதனைச் சாவடிகளை தவிர்த்து வேறு எங்கு வேண்டுமானாலும் தனிக்கையில் ஈடுபட்டு அபராதம் வசூலிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios