வேளாண் பட்ஜெட் உரையை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் நிறைவு செய்தார். 1 மணி 55 நிமிடங்கள் வேளாண் பட்ஜெட்டை அவர் வாசித்துள்ளார்.
- Home
- Politics
- TN Agriculture Budget 2022-2023: தமிழக வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல்.. விவசாயிகள் எதிர்பார்ப்புகள் நிறைவேறுமா?
TN Agriculture Budget 2022-2023: தமிழக வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல்.. விவசாயிகள் எதிர்பார்ப்புகள் நிறைவேறுமா?

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் விவசாயிகளுக்கென தனி பட்ஜெட் தாக்கல் செய்யும் நடைமுறை அமலானது. அதன் படி கடந்த ஆண்டு முதன் முறையாக தமிழக அரசு சார்பில் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதன் மூலம் கர்நாடகா, ஆந்திரா, ஆகிய இரு மாநிலங்களுக்கு பிறகு வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்யும் 3-வது மாநிலம் என்ற பெருமை தமிழகத்திற்கு கிடைத்துள்ளது.
1 மணி 55 நிமிடங்கள் வேளாண் பட்ஜெட்டை வாசித்த அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம்
அரசு மாணவியர் விடுதிகளில் காய்கறி, பழங்கள், மூலிகை தோட்டம்
அரசு மாணவியர் விடுதிகளில் காய்கறி, பழங்கள், மூலிகை தோட்டம் நிறுவப்படும். 200 விடுதிகளில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் திட்டம் செயல்படுத்தப்படும் என வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகள் வேளாண்மை விரிவாக்கத்திற்கு இ-சலான், கிரெடிட் கார்ட், டெபிட் கார்ட்
விவசாயிகள் வேளாண்மை விரிவாக்க மையங்களில் இடுபொருட்களை பெறும்போது, தங்கள் பங்களிப்பு தொகையினை இ-சலான், கிரெடிட் கார்ட், டெபிட் கார்ட், ஒருங்கிணைந்த பணப்பரிவர்த்தனை (UPI) மூலம் செலுத்த வழிவகை செய்யப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
வாழ்ந்துகாட்டுவோம் திட்டத்தில் சமுதாய பண்ணை பள்ளிகளை உருவாக்க ரூ.30.56 கோடி ஒதுக்கீடு
வாழ்ந்துகாட்டுவோம் திட்டத்தில் உற்பத்தியாளர் குழு, சமுதாய பண்ணை பள்ளிகளை உருவாக்க ரூ.30.56 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பருவம் இல்லாத தக்காளி சாகுபடியை ஊக்குவிக்க ரூ.4 கோடி ஒதுக்கீடு
பருவம் இல்லாத தக்காளி சாகுபடியை ஊக்குவிக்க ரூ.4 கோடி ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது என வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
விவசாய பணிகளில் ட்ரோன்களின் பயன்பாட்டுக்கு ரூ.10 கோடி ஒதுக்கீடு
விவசாய பணிகளில் ட்ரோன்களின் பயன்பாட்டுக்கு ரூ.10 கோடியில் திட்டம் செயல்படுத்தப்படும் என வேளாண் பட்ஜெட்டில் அறிவித்துள்ளார்.
விவசாயிகளுக்கு வழிகாட்ட தமிழ் மண்வளம் என்ற இணையதளம் உருவாக்கப்படும்
விவசாயிகளுக்கு வழிகாட்ட தமிழ் மண்வளம் என்ற இணையதளம் உருவாக்கப்படும் என வேளாண் பட்ஜெட்டில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
TN Agriculture Budget 2022: விவசாயப் பொருட்களுக்கான தொழிற்பேட்டை அமைக்கப்படும்
திருவாரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சிக் கழகம் (டான்சிகோ) மூலம் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களுக்கு ஏற்ற விலையைப் பெறுவதை உறுதி செய்யும் வகையில் விவசாயப் பொருட்களுக்கான தொழிற்பேட்டை அமைக்கப்படும்.
வேளாண் பண்ணை குட்டைகள் அமைக்க ரூ.3 கோடி ஒதுக்கீடு
வேளாண் பண்ணை குட்டைகள் அமைக்க ரூ.3 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
3 ஆயிரம் விவசாயிகளுக்கு சோலார் பம்புசெட்கள்... ரூ. 65 கோடி ஒதுக்கீடு
ரூ. 65 கோடியில் 3 ஆயிரம் விவசாயிகளுக்கு சோலார் பம்புசெட்கள் வழங்கப்படும் என வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
TN Agriculture Budget 2022: மாலை நேரத்திலும் உழவர் சந்தைகள்
மாலை நேரத்திலும் உழவர் சந்தைகள் செயல்பட வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது. உழவர் சந்தைகளில் மாலை நேரத்தில் சிறுதானியங்கள் விற்பனை செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
TN Agriculture Budget 2022: கைபேசியால் இயக்கப்படும் பம்பு செட்டுகள்
பம்பு செட்டுகள் இயக்க தோட்டங்களுக்கு செல்லும் விவசாயிகள் பாம்பு கடித்து இறப்பதை தடுக்க, தானியங்கியாகவோ அல்லது செல்போன் மூலமாக பம்பு செட்டுகளை இயக்கும் திட்டம் ரூ.5 கோடி செலவில் செயல்படுத்தப்படும் என வேளாண் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பனை மரம் ஏறும் கருவியை கண்டுபிடிப்பவர்களுக்கு விருது
பனை மரம் ஏறும் கருவியை கண்டுபிடிப்பவர்களுக்கு விருது வழங்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய மின் மோட்டார் பம்பு செட்டுகள் மானியத்தில் வழங்க ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பயிர்களில் பூச்சிகள் தாக்குதலை கட்டுப்படுத்த ரூ.5 கோடி சிறப்பு நிதி
பயிர்களில் பூச்சிகள் தாக்குதலை கட்டுப்படுத்த ரூ.5 கோடி சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஆதித்திராவிடர், பழங்குடியின சிறு, குறு விவசாயிகளுக்கு கூடுதலாக 20 சதவீத மானியம்
ஆதித்திராவிடர் மற்றும் பழங்குடியின சிறு, குறு விவசாயிகளுக்கு கூடுதலாக 20 சதவீத மானியம் வழங்கப்படும் என வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
3 மாவட்டங்களில் மொத்த காய்கறி விற்பனை மையங்கள்
தேனி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களில் மொத்த காய்கறி விற்பனை மையங்கள் அமைக்கப்படும். அண்டை மாநில வணிகர்கள் இங்கு நேரடியாக கொள்முதல் செய்ய வசதி ஏற்படுத்தப்படும்.
டெல்டா மாவட்டங்களில் 4964 கி.மீ கால்வாய்கள் தூர்வாரும் பணிகளுக்கு ரூ.80 கோடி ஒதுக்கீடு
டெல்டா மாவட்டங்களில் 4964 கி.மீ கால்வாய்கள் தூர்வாரும் பணிகளுக்கு ரூ.80 கோடி ஒதுக்கீடும், அயிரை, செல் கெண்டை, கல்பாசு போன்ற உள்நாட்டு மீன் வளர்ப்புக்கு ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
TN Agriculture Budget 2022: சோயா பீன்ஸ் சாகுபடியை அதிகரிக்க நடவடிக்கை
தஞ்சை, சேலம், திருவள்ளூர், நெல்லை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் சோயா பீன்ஸ் சாகுபடியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
திண்டிவனம், தேனி, மணப்பாறையில் பிரமாண்ட உணவுப்பூங்கா அமைக்க ரூ.381 கோடி ஒதுக்கீடு
திண்டிவனம், தேனி, மணப்பாறையில் பிரமாண்ட உணவுப்பூங்கா அமைக்கப்படும், இதற்காக ரூ.381 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என வேளாண் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிதாக உழவர் சந்தைகள் உருவாக்க ரூ.10 கோடி ஒதுக்கீடு
50 உழவர் சந்தைகளை மேம்படுத்த ரூ.15 கோடியும், புதிதாக உழவர் சந்தைகள் உருவாக்க ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னை, திருச்சியில் நச்சு பகுப்பாய்வு ஆய்வகம் அமைக்க ரூ.15 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.