Asianet News TamilAsianet News Tamil

’என்னடா இது மதுரைக்கு வந்த சோதனை?’...எம்.பி. தேர்தலில் வெற்றி பெற்ற 5 எலக்கியவாதிகள்...

இலக்கியவாதிகளுக்கும் அரசியலுக்கும் ஏழாம்பொருத்தம் என்கிற நிலையில் இந்த பாராளுமன்றத் தேர்தலில் திமுக சார்பாகப் போட்டியிட்ட ஒரு ஒரிஜினல் இலக்கியவாதியும், இலக்கியவாதிகள் என்று தன்னைத்தானே அழைத்துக்கொள்ளும் இன்னும் 4 பேரும் வெற்றிபெற்று வியப்பை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.
 

this time we have 5 mp's from literature in tamilnadu
Author
Chennai, First Published May 23, 2019, 6:02 PM IST

இலக்கியவாதிகளுக்கும் அரசியலுக்கும் ஏழாம்பொருத்தம் என்கிற நிலையில் இந்த பாராளுமன்றத் தேர்தலில் திமுக சார்பாகப் போட்டியிட்ட ஒரு ஒரிஜினல் இலக்கியவாதியும், இலக்கியவாதிகள் என்று தன்னைத்தானே அழைத்துக்கொள்ளும் இன்னும் 4 பேரும் வெற்றிபெற்று வியப்பை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.this time we have 5 mp's from literature in tamilnadu

மதுரை மக்களவைத் தொகுதியில் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாகப் போட்டியிட்ட சு.வெங்கடேசன் தனது ‘காவல் கோட்டம்’ நாவலுக்காக சாகித்ய அகாடமி விருது வென்றவர். ‘வேள்பாரி’,’வைகை நதி நாகரிகம்’ என்ற வரலாற்று நூல்களையும் எழுதியவர். தேர்தலில் வென்ற மற்ற எலக்கியவாதிகள் பட்டியலில் இடம்பெற்றிருப்பவர்கள் தமிழச்சி தங்கப்பாண்டியன், கனிமொழி, ஜோதிமணி மற்றும் விசிகவின் ரவிக்குமார் ஆகியோர்.this time we have 5 mp's from literature in tamilnadu

இலக்கியவாதிகள் வழக்கமான அரசியல்வாதிகளைப் போலில்லாமல் சமூகங்களில் நடக்கும் அநீதிகளைக் கண்டு பொங்குபவர்கள், அதைத் தட்டிக்கேட்பவர்கள் என்கிற பிம்பம் உண்டு. சும்மாவே பொங்குகிற இவர்கள் எம்.பி பதவியில் இருந்துகொண்டு பொங்கத் துவங்கினால் மக்களுக்கு நல்லது நடந்தே தீரும் என்று உறுதியாக நம்பலாம்.

Follow Us:
Download App:
  • android
  • ios