Asianet News TamilAsianet News Tamil

திமுகவின் தரம் இவ்வளவு தான்... ஓ.பி.எஸ் கடும் விமர்சனம்..!

தங்க.தமிழ்செல்வனுக்கு திமுகவில் கொள்கை பரப்புச் செயலாளர் பதவி கொடுக்கப்பட்டு இருப்பது அக்கட்சியின் தரத்தை காட்டுவதாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் விமர்சித்துள்ளார்.

The quality of the DMK is OPS is heavy criticism
Author
Tamil Nadu, First Published Aug 30, 2019, 5:46 PM IST

தங்க.தமிழ்செல்வனுக்கு திமுகவில் கொள்கை பரப்புச் செயலாளர் பதவி கொடுக்கப்பட்டு இருப்பது அக்கட்சியின் தரத்தை காட்டுவதாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் விமர்சித்துள்ளார்.

The quality of the DMK is OPS is heavy criticism

தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஜி.கே.மூப்பனாரின் 18-வது நினைவு தினத்தையொட்டி, சென்னை தியாகராய நகரில் உள்ள அவரின் நினைவிடத்தில்  துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘’பாஜக அரசில் அனைத்து துறைகளிலும் மறுசீரமைப்பு பணி நடைபெற்று வருகிறது. வரிச்சுமை இல்லாத நிலையை உருவாக்க மத்திய அரசு முயன்று வருகிறது.  The quality of the DMK is OPS is heavy criticism

தங்க தமிழ்செல்வனுக்கு திமுகவில் கொள்கை பரப்புச் செயலாளர் பதவி கொடுக்கப்பட்டு இருப்பது அக்கட்சியின் தரத்தை காட்டுகிறது. வெளிநாட்டு பயணம் குறித்து முதல்வரே தெளிவான விளக்கம் அளித்துள்ளார்’’ என அவர் தெரிவித்தார். அதிமுகவில் இருக்கும் போதே தேனியில் தங்க தமிழ்செல்வனுக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் மோதல் நிலவி வந்தது. இதனால் தான் தங்க தமிழ்செல்வன் அமமுகவுக்கு ஆதரவு தந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Follow Us:
Download App:
  • android
  • ios