Asianet News TamilAsianet News Tamil

எடப்பாடி மீது கடுங்கோபத்தில் கனிமொழி... பதிலடி கொடுக்கும் பழைய ஃப்ளாஷ்பேக்..!

ஊடகங்களின் மீது நடத்தப்படும் இது போன்ற தாக்குதல்கள், கடுமையாக கண்டிக்கப்பட வேண்டும் என எடப்பாடியை கண்டித்துள்ள கனிமொழிக்கு தினகரன் தீவைப்பு சம்பவத்தை நியாபகப்படுத்தி வருகின்றனர் அதிமுகவினர். 

The oldest flashback in retribution kanimozhi to Edappadi palanisamy
Author
Tamil Nadu, First Published Dec 30, 2019, 3:41 PM IST

கன்னியாகுமரியில் ஒரு வார இதழ் நாளிதழ் கைது செய்யப்பட்டார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள கனிமொழி, ‘’ஊடகங்களை மிரட்டும் நோக்கோடு, கன்னியாகுமரியில் உள்ள இலங்கை தமிழர் அகதிகள் முகாமில் சென்று பேட்டியெடுத்த ஜூனியர் விகடன் நிருபர்கள் மீது, பிணையில் வெளிவர முடியாத பிரிவுகளில் எடப்பாடி அரசு வழக்கு பதிவு செய்துள்ளது.

The oldest flashback in retribution kanimozhi to Edappadi palanisamy

ஒரு ஜனநாயக நாட்டில், ஊடகங்களின் மீது நடத்தப்படும் இது போன்ற தாக்குதல்கள், கடுமையாக கண்டிக்கப்பட வேண்டும்.  உடனடியாக ஊடகத்தினர் மீது பதிவு செய்யப்பட்டுள்ள இந்த வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்’’ எனத் தெரிவித்துள்ளார்.

 

இந்தப்பதிவுக்கு பழைய ஃப்ளாஷ்பேக்கை நினைவூட்டி ‘’மதுரை தினகரன் அலுவலகம் தீ வைத்து கொளுத்தியத்தை பற்றி என்ன நினைக்கிறீர்கள் தோழி. நீங்கள் பத்திரிக்கையாளர் நலனை பற்றி பேசலாமா? ‘’என கேள்வி கேட்டு அதிர வைத்து வருகிறார்கள் அதிமுகவினர்.  

 

Follow Us:
Download App:
  • android
  • ios