அடுத்த முதல்வர் ரஜினிதான்! கமல் ஒன்னும் சாதிக்க முடியாது... ஆண்டவரின் அண்ணன் அட்ராசிட்டி

The next CM will be from Karnaataka Those who do not agree
First Published May 1, 2018, 11:03 AM IST | Last Updated Sep 19, 2018, 3:18 AM IST



தமிழகத்தின் அடுத்த முதல்வர் கர்நாடகத்தைச் சேர்ந்தவர் அப்படி சொல்வதால் தன்னை முட்டாள் என்று கூறினால், கூறிக் கொள்ளட்டும். அவர்கள் என்னை அடுத்த வருடம் புரிந்து கொள்வார்கள் என்றும் கூறியுள்ளார் சாருஹாசன்.

தமிழகத்தின் அடுத்த முதல்வர் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் என்று சாருஹாசன் தனது பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளார். ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் அரசியலில் குதித்துள்ளனர். இதில் கமல்ஹாசன் கட்சியை தொடங்கிவிட்டார். ஆனால் ரஜினி அரசியலுக்கு வருவது உறுதி, கட்சி தொடங்குவது குறித்து தேதியை இன்னும் தேதியை முடிவு செய்யவில்லை என்று கூறியுள்ளார்.

இந்நிலையில், நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனின் அண்ணன் சாருஹாசன், ஆன்மீக அரசியல் தொடங்கவிருக்கும் ரஜினிகாந்த்க்கு ஆதரவான கருத்தையே கூறி வருகின்றார். மேலும் கமல்ஹாசனால் அரசியலில் எதையும் சாதிக்க முடியாது என்றும் கூறி வருகிறார்.

சாருஹாசன் தனது பேஸ்புக் பதிவில், “கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர்தான் அடுத்த முதல்வர். இதை ஏற்றுக் கொள்ளாதவர்கள் என்னை முட்டாள் என்றே அழைக்கலாம். இந்த ஆண்டு நான் உங்களை புரிந்து கொள்கிறேன். அடுத்த ஆண்டு நீங்கள் என்னை புரிந்து கொள்வீர்கள்” என தனது ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.