நான்கூட விமானத்தில் ஹைகிளாசில் சென்றதில்லை. நான் சென்ற அதே விமானத்தில் காம்ரேட் எனச் சொல்லிக்கொண்டு J கிளாசில் பயணம் செய்வதாக பாஜக தேசிய தலைவர் ஹெச்.ராஜா பொறுமித் தள்ளியிருக்கிறார்.

இதுகுறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில், ‘’பெயர் சொல்ல விரும்பவில்லை. நான் இன்று வரை விமானத்தில் J கிளாசில் போனதில்லை. ஆனால், தங்களை காம்ரேட் என்றும் தொழிலாளிகள் துணைவன் என்றும் கூறிக்கொண்டு J கிளாசில் நான் சென்ற அதே விமானத்தில் பயணித்த நபர்கள் இன்று தொலைக்காட்சியில் பாடம் எடுக்கின்றனர்’’ எனத் தெரிவித்துள்ளார். 

அதற்கு, ‘’உங்களிடம் உண்மை இருந்தால் வெளிப்படையாக சொல்லுங்கள். இல்லையேல் அது குறித்து பேசவேண்டாம். தலைமைக்கு அழகு தைரியம்’’ என ஒருவர் கேள்வி எழுப்பியதற்கு பதிலளித்துள்ள ஹெச்.ராஜா நியூஸ் ஜே பாருங்கள் எனப் பதிலளித்துள்ளார்.

 

அவர்களிடம் தங்கள் கட்சியை ரூபாய் 25 கோடிக்கு விற்பனை செய்த பணம் உள்ளது. மக்களை அடமானம் வைக்கும் கயவர்கள் என ஒருவர் கமெண்ட் பதிவிட்டுள்ளார்.