Asianet News TamilAsianet News Tamil

கருணாநிதிக்குக் கட்டுவது பகுத்தறிவாலயமாம்... கோயில் இல்லை என திமுக மா.செ. அறிவிப்பு

பகுத்தறிவுவாதியான கருணாநிதிக்குக் கோயில் கட்டுவதை பலரும் கிண்டல் செய்தனர். கருணாநிதி மீது பற்றுக்கொண்ட குச்சிக்காடு கிராம மக்கள் விருப்பத்தின் பேரில் கோயில் கட்டப்படுவதாகவும் கூறப்பட்டது. 
 

Temple of karunanidhi bulid in rasipuram
Author
Rasipuram, First Published Aug 31, 2019, 8:53 AM IST

 நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் கட்டப்பட்டுவருவது கருணாநிதி கோயில் அல்ல; அது பகுத்தறிவாலயம் என்று திமுகவைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் காந்திச் செல்வன் தெரிவித்துள்ளார்.Temple of karunanidhi bulid in rasipuram
மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு ராசிபுரத்தில் உள்ள குச்சிக்காடு கிராமத்தில் கோயில் கட்டப்படுவதாக அண்மையில் தகவல் வெளியானது. இதற்காக பூமி பூஜை நடந்ததாகவும் தகவல் வெளியானது. இந்தத் தகவல் சமூக ஊடகங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியது. பகுத்தறிவுவாதியான கருணாநிதிக்குக் கோயில் கட்டுவதை பலரும் கிண்டல் செய்தனர். கருணாநிதி மீது பற்றுக்கொண்ட குச்சிக்காடு கிராம மக்கள் விருப்பத்தின் பேரில் கோயில் கட்டப்படுவதாகவும் கூறப்பட்டது.

 Temple of karunanidhi bulid in rasipuram
இந்நிலையில் குச்சிக்காடு கிராமத்துக்கு நாமக்கல் மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் மத்திய அமைச்சருமான காந்திசெல்வன் நேரில் வருகை தந்தார். அங்கே கருணாநிதிக்குக் கோயில் கட்டப்படுகிறதா என்பது குறித்து விசாரித்தார். இதன்பிறகு அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

 Temple of karunanidhi bulid in rasipuram
 “குச்சிக்காடு கிராம மக்கள் கருணாநிதிக்குக் கோயில் கட்டவில்லை. இங்கே பகுத்தறிவாலயம்தான் எழுப்பப்படுகிறது. நினைவிடத்தில் இருப்பது போலவே கருணாநிதியின் சிலை இருக்கும். மேலும் போட்டித் தேர்வுக்கு மாணவர்களைத் தயார் செய்யும் வகையில்  இணைய வசதியும்கூடிய நூலகமும் அமைக்கப்பட உள்ளது. கணினி வசதியும் ஏற்படுத்தப்பட உள்ளது” என்று காந்திச்செல்வன் தெரிவித்தார். 

Follow Us:
Download App:
  • android
  • ios