இந்தியாவில் தலைசிறந்த இளம் எம்.எல்.ஏ விருதை மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி பெற்றுள்ளார். 

மஹாராஷ்டிரா மாநிலத்தில் 72 பல்வேறு கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறது எம்.ஐ.டி பல்கலைக்கழகம். இதில் 58-ஆயிரத்திற்கும் அதிகமான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்தியாவின் புகழ்பெற்ற முதல் 10 தனியார் பல்கலைக் கழகங்களில் இதுவும் ஒன்று. இந்தியாவில் இங்கு மட்டும்தான்  எம்.ஏ முதுநிலையில் அரசியல் அறிவு மற்றும் மேலாண்மைக்கான  என்ற சிறப்பு படிப்பு உள்ளது.

 

இந்நிலையில், இந்தியாவின் முன் மாதிரி இளம் அரசியல் தலைவர்களை கண்டறிந்து இந்தப்பல்கலைக்கழகம் விருதுகளை வழங்கி ஊக்குவித்து வருகிறது. இந்தாண்டு இந்தியாவின் பல்வேறு ஆய்வுகள் மற்றும் சட்டமன்ற தரவுகளின் அடிப்படையில் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளரும், நாகை சட்டமன்ற உறுப்பினருமான மு.தமிமுன் அன்சாரியை தேர்வு செய்தது. 

தமிழ்நாட்டில் முதல் விருதை பெறுபவரும் இவரே. இன்று தலைநகர் டெல்லியில் விஞ்ஞான் பவனில் நடைப்பெற்ற நிகழ்வில் பல அறிஞர் பெருமக்கள் முன்னிலையில் இவ்விருது அவருக்கு வழங்கப்பட்டது.