Asianet News TamilAsianet News Tamil

10, 11, 12 வகுப்பு மாணவர்களுக்கு ஆல் பாஸ் போடுங்க..!! புதிய ஐடியா கொடுக்கும் அரசுப் பள்ளி ஆசிரியர் சங்கம்..!!

1 முதல் 9 ஆம் வகுப்புவரை அனைவரும் தேர்ச்சி என்ற அறிவிப்பு வரவேற்க தக்கது அதே நேரத்தில்  10,11,12 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் தேர்ச்சியளிக்க ஆவன செய்ய வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

tamilnadu teachers association demand all pass for 10th 11th 12th standard and gave new idea
Author
Chennai, First Published Mar 25, 2020, 5:11 PM IST

1 முதல் 9 ஆம் வகுப்புவரை அனைவரும் தேர்ச்சி என்ற அறிவிப்பு வரவேற்க தக்கது அதே நேரத்தில்  10,11,12 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் தேர்ச்சியளிக்க ஆவன செய்ய வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.  இது குறித்து அச்சங்கத்தின் மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன். வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம் :- கொரோனா வைரஸ் பரவலிலிருந்து மக்களை காப்பாற்ற தீவிரநடவடிக்கைகள் எடுத்துவரும் தமிழ்நாடு அரசை பாராட்டி மகிழ்கிறோம். 21 நாள் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அவசியமான ஒன்றாகஉள்ளது.  இந்நிலையில் தமிழ்நாடு அரசு 1 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி அறிவித்துள்ளது வரவேற்புக்குரியது.  பேரிடர் காலக்கட்டத்தில் மக்களைக் காப்பாற்றுவதே முதன்மையான தாகும் . 

tamilnadu teachers association demand all pass for 10th 11th 12th standard and gave new idea

உயிரா படிப்பா என்றால் உயிரே முக்கியம் சுவர் இருந்தால்தான் சித்திரம் வரையமுடியும். ஆகையால்  10 ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு தொடங்கவே இல்லை. 11 ம் வகுப்பிற்கு கடைசித் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.  12 ஆம் வகுப்பு கடைசித்தேர்வில் 34 ஆயிரம்  மாணவர்கள் எழுதவில்லை.தேர்வுஎழுதாதவர்களுக்கு மறுதேதி அறிவிக்ப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாவும் மின்னல் வேகத்தில் பரவிவருகிறதென்று சுகாதாரத்துறை அமைச்சர் எச்சாரிக்கை விடுத்துள்ளார். மாண்புமிகு பிரதமர் அவர்களும் உயிர் காப்பாற்றும் நடவடிக்கையில் ஈடுபடவேண்டும் வலியுறுத்தியுள்ளிர். இந்நிலையில் எதிர்கால மாணவர்களின் நிலைக்குறித்து பெற்றோர்கள் பெரும் அச்சத்திலும் மனஉளைச்சலிலும் உள்ளார்கள்.வீட்டிலேயே முடங்கிஉள்ளதாலும் குழந்தைகளின் மேற்படிப்பு என்னவாகுமோ என்ற குழப்பத்தில் உள்ளார்கள். எனவே 10,11 மற்றூம் 12 ஆம்  வகுப்புகளின் அனைத்துப் பொதுத்தேர்வுகளையும் ரத்துசெய்து அனைவரும் தேர்ச்சி அறிவித்திட வேண்டுகிறேன். 

tamilnadu teachers association demand all pass for 10th 11th 12th standard and gave new idea

மேலும் கொரோனா கட்டுப்பாட்டிற்குள் வந்தபிறகு மாணவைர்கள் தங்களின்  மேற்படிப்பில் பாடப்பிரிவினை தயார் செய்வதற்கு  அரசே ஒரு சிறப்புத்தேர்வு வைத்து தேர்வுசெய்து கல்லூரிகளில் இடமளிக்கலாம். ஏற்கனவே மருத்துவம் பொறியியல்   படிப்புகளுக்கு 1985 ஆண்டில் அன்றைய முதலமைச்சர் அவர்கள் தேர்வுகள் நடத்தியது குறிப்பிடத்தக்கது. அதுபோன்று  கலை அறிவியல் கல்லூரிகளில் விரும்பியப் பாடங்களை தேர்வு செய்ய மாநில அரசே சிறப்புத்தேர்வு வைத்து மாணவர்களையும், கல்லூரிகளையும்  தேர்வுசெயது அளிக்கலாம். மேலும் பெற்றோர்கள் மாணவர்கள் பாதுகாப்பினை உறுதிசெய்யும் வகையில்  மாண்புமிகு முதலமைச்சர் 10,11 மற்றும் 12 ஆம் வகுப்புப் பொதுத்தேர்வுகளை ரத்துசெய்து அனைவரும் தேர்ச்சி அறிவிக்க ஆவனசெய்யும்படி தமிழ்நாடு ஆசிரியர் சங்கம்  கேட்டுக்கொண்டுள்ளது. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios