Asianet News TamilAsianet News Tamil

மத்தவங்க போல இல்ல.. நம்மாளுங்க நல்ல ஒத்துழைப்பு கொடுக்கிறாங்க..! தமிழக மக்களை மெச்சிய எடப்பாடி..!

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 5 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பி இருப்பதாக கூறிய முதல்வர் பழனிசாமி பிற மாநிலங்களை விட தமிழக மக்கள் நன்றாகவே ஒத்துழைப்பு அளிப்பதாக தெரிவித்திருக்கிறார். 

tamilnadu people cooperates very well compared to other states, says cm edapadi
Author
Tamil Nadu, First Published Mar 30, 2020, 1:52 PM IST

இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் நோய் தற்போது தமிழகத்திலும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று ஒரே நாளில் 17 ஆக உயர்ந்து 67 பேர் சிகிச்சையில் இருப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருக்கிறார். இன்று சென்னையில் உயர் அதிகாரிகளுடன் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார். 

கொரோனா தடுப்பு நடவடிக்கை குழுக்களுடன் முதலமைச்சர் ஆலோசனை

அப்போது தமிழகத்தில் 67 பேருக்கு இதுவரையில் கொரோனா பாதிப்பு இருந்தபோதும் ஒருவர் மட்டுமே பலியாகி இருப்பதாக தெரிவித்தார். 
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 5 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பி இருப்பதாக கூறிய முதல்வர் பழனிசாமி பிற மாநிலங்களை விட தமிழக மக்கள் நன்றாகவே ஒத்துழைப்பு அளிப்பதாக தெரிவித்திருக்கிறார். கொரோனா நோய்க்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்காததால், தற்போது இருப்பது ஒரே தடுப்பு மருந்தாக மக்கள் தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழகத்தில் 67 பேருக்கு கொரோனா தொற்று- முதல்வர் பழனிசாமி பேட்டி

வீட்டு வாடகைதாரர்களின் கோரிக்கை பரிசீலனை செய்யப்படுவதாக கூறியிருக்கும் முதல்வர் 25 லட்சம் என்-95 ரக முகக்கவசங்களும் 1.50 கோடி சாதாரண முகக்கவசங்கள் வாங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்திருக்கிறார். மேலும் புதியதாக ஈரோடு மாவட்டத்தில் 10  பேருக்கும், சென்னையில் 4 பேருக்கும், மதுரையில் 2 பேருக்கும், திருவாரூரில் ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகி தமிழகத்தில் 67 பேர் தனிமை சிகிச்சையில் வைக்கப்பட்டிருப்பதாக முதல்வர் பழனிசாமி செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.

Follow Us:
Download App:
  • android
  • ios