7 தமிழர் விடுதலையை நீதிமன்றம் அறிவித்தால் ஏற்றுக்கொள்வோம் என தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ் அழகிரி கூறியுள்ளார் . ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்று வரும் சாந்தன், முருகன்,  பேரறிவாளன் உள்ளிட்ட ஏழுபேரை  விடுதலையை  ஏற்றுக்கொள்ள முடியாது என காங்கிரஸ் எதிர்த்துவரும் நிலையில் கே எஸ் அழகிரி  இவ்வாறு கூறியிருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.  தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸின் மாநில நிர்வாகிகள் கூட்டம் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது .  அதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி  வமை தலைமை தாங்கினார் , அதில்  இன்னும் பல முக்கிய நிர்வாகிகளும் கலந்து கொண்டனர் .  

தற்போது  நாட்டில் நிலவும் வேலையில்லாத் திண்டாட்டம் அதனால் ஏற்படும் பிரச்சனைகள்  குறித்து தேசிய அளவிலான பேச்சு போட்டியை தொடங்கி வைத்தார் பின்னர் அக்கூட்டத்தில் பேசிய அவர் ,  இந்திய குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது .  தமிழகத்தில் அமைதியான முறையில் போராட்டங்கள் நடக்கிறது ,  ஆனாலும் போராட்டக்காரர்கள் மீது வன்முறையாளர்கள் என்ற முத்திரை குத்தப்பட்டது போலீசார் தடியடி நடத்தியுள்ளனர்,   இது வன்மையாக கண்டிக்கத்தக்கது .  காவிரி டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக  அறிவிக்கப்பட்டதன் மூலம் விவசாயிகளுக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை தமிழக அரசு ஏன் இன்னும் விளக்கி கூறவில்லை .  என கேள்வி எழுப்பினார்.  அவர் அறிவித்த பல்வேறு அறிவிப்புகளில் ஒன்று என்று  எனறால் போய்விடும் என்றார் . 

ராஜீவ் கொலையில் தண்டனை பெற்று வரும் ஏழு தமிழர்கள் விடுதலையை நீதிமன்றம்தான் முடிவு செய்ய வேண்டும் ,  அவர்களை விடுவித்தால் சிறைச்சாலைகளில் 25 ஆண்டுகளுக்கு மேலாக இருக்கும் கொலை குற்றவாளிகள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும்  என்ற கோரிக்கை எழும்.   ஆனாலும் 7 பேர் யை  நீதிமன்றம் அறிவித்தால் அதை நாங்கள் ஏற்றுக் கொள்வோம்,   ஆனால் அரசியல் கட்சியினர் இவர்களின்  விடுதலை கோருவதை  ஏற்றுக் கொள்ள முடியாது .  அதேபோல் நடிகர் விஜய் காங்கிரசில் சேருவது பற்றி பேசப்பட்டதே தவிற அவர் அழைக்கப்படவில்லை .  விஜய் காங்கிரஸ் கட்சிக்கு வந்தால் மனதார ஏற்றுக் கொள்வோம்  இவ்வாறு அவர் கூறினார் .