அதிமுக மாநிலங்களவை எம்.பி. பதவிக்கு ஒரே மாவட்டத்தை சேர்ந்த தம்பிதுரை, கே.பி.முனுசாமி ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளது அக்கட்சியை சேர்ந்த மூத்த நிர்வாகிகள் கடும் அதிருப்தியில் இருந்து வருகின்றனர். 

தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்ட திருச்சி சிவா, டி.கே.ரங்கராஜன், சசிகலா புஷ்பா, விஜிலா சத்யானந்த், செல்வராஜ், முத்துக்கருப்பன் ஆகிய 6 பேரின் பதவிக்காலம் வருகிற ஏப்ரல் 2-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து, 6 மாநிலங்களவை எம்.பி.க்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் வருகிற 26-ம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் அதிமுக, திமுக சார்பில் தலா 3 பேரை போட்டியின்றி தேர்வு செய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 

இதையும் படிங்க;- தெரிந்தே செய்த தவறுக்கு பதில் தெரியாமல் திணறும் ஓபிஎஸ்... 30 நாட்கள் அவகாசம் கேட்டு கோரிக்கை..!

இந்நிலையில், ஏற்கனவே திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், பல்வேறு நெருக்கடிகளுக்கு இடையே ஒரு வழியாக வேட்பாளர்களை அறிவித்தனர். அதில், கே.பி.முனுசாமி, மு.தம்பிதுரை, அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள தமாகா தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோர் பெயர்கள் அறிவிக்கப்பட்டது. அதிமுக கூட்டணி தர்மப்படி சீட் வழங்கும் எதிர்பார்க்கப்பட்ட தேமுதிகவுக்கு சீட் மறுக்கப்பட்டது. 

இதையும் படிங்க;- பாஜகவுடன் தமாகா இணைப்பா..? பரபரப்பு தகவலை வெளியிட்ட ஜி.கே.வாசன்..!

இதையும் படிங்க;-  அதிமுகவில் முதல்வர் பதவிக்காக காத்திருக்கும் அந்த 25 பேர்... அழியபோகும் அம்மா கட்சி..? ஜெ. உதவியாளர் கதறல்..!

இந்நிலையில், மக்களவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தந்தும் தோல்வியடைந்த தம்பிதுரை, கே.பி.முனுசாமி ஆகியோருக்கு மாநிலங்களவையில் சீட் வழங்கப்பட்டுள்ளது மூத்த நிர்வாகிகள் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், தென்மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு அமைச்சர் பதவியும் வழங்காமல், மாநிலங்களவை எம்.பி. பதவியும் வழங்காமல் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வரும் நிலையில் ஒரே மாவட்டத்தைச் சேர்ந்த தம்பிதுரை, கே.பி.முனுசாமி ஆகியோருக்கு எம்.பி. பதவி வழங்கி இருப்பது தவறான முன் உதாரணம். ஜெயலலிதா, இருந்திருந்தால் இந்த தவறு நடத்திருக்குமா என அதிமுக நிர்வாகிகள் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.