Asianet News TamilAsianet News Tamil

ஒரு பிரச்சினை என்று ட்விட்டர் பதிவு போட்டாலே போதும்...ஓடோடி வந்து உதவிய சுஷ்மா...

பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும், மற்ற கட்சியினர் அனைவராலும் மிகவும் நேசிக்கப்பட்ட அரசியல் தலைவரும்  இந்தியாவின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சருமான சுஷ்மா சுவராஜ் திடீர் உடல்நலக் குறைவு காரணமாக செவ்வாய்க்கிழமை இரவு காலமானார்.1952ஆம் ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதி பிறந்த சுஷ்மா சுவராஜுக்கு 67 வயது. யாருக்காவது ஒரு பிரச்சினை என்றால் அவர்களது ட்விட்டர் பதிவு கண்டதுமே உதவும் உள்ளம் கொண்டவர் சுஷ்மா.
 

some personal data about late sushma swaraj
Author
Chennai, First Published Aug 7, 2019, 10:52 AM IST

பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும், மற்ற கட்சியினர் அனைவராலும் மிகவும் நேசிக்கப்பட்ட அரசியல் தலைவரும்  இந்தியாவின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சருமான சுஷ்மா சுவராஜ் திடீர் உடல்நலக் குறைவு காரணமாக செவ்வாய்க்கிழமை இரவு காலமானார்.1952ஆம் ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதி பிறந்த சுஷ்மா சுவராஜுக்கு 67 வயது. யாருக்காவது ஒரு பிரச்சினை என்றால் அவர்களது ட்விட்டர் பதிவு கண்டதுமே உதவும் உள்ளம் கொண்டவர் சுஷ்மா.some personal data about late sushma swaraj

சுஷ்மா குறித்த சில முக்கிய குறிப்புகள் உங்கள் பார்வைக்கு...

அடல் பிகாரி வாஜ்பேயி தலைமையிலான அமைச்சரவையில் சுகாதாரம் மற்றும் குடும்பநலம், தகவல் மற்றும் ஒளிபரப்பு ஆகிய துறைகளுக்கும் அமைச்சராக இருந்துள்ளார்.

சுஷ்மா - ஸ்வராஜ் கௌஷல் திருமணம்.உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞரான ஸ்வராஜ் கௌஷலை 1975ஆம் ஆண்டு ஜூலை 13ஆம் தேதி திருணம் செய்தார் சுஷ்மா ஸ்வராஜ்.1990ல் இந்தியாவிலேயே மிகவும் இளம் வயதில் ஆளுநர் ஆனவர் ஸ்வராஜ் கௌஷல்.

1990 - 1993 வரை மிசோரத்தின் ஆளுநராக ஸ்வராஜ் கௌஷல் பணியாற்றினார்.1998 - 2004 வரை அவர் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்.1973ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்ற தொடங்கினார் சுஷ்மா ஸ்வராஜ்.some personal data about late sushma swaraj

1970ல் மாணவர் தலைவராக இருந்த  சுஷ்மா ஸ்வராஜ், அப்போதைய இந்திரா காந்தி அரசாங்கத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டங்களை ஒருங்கிணைத்து நடத்தத்துவங்கியதன் மூலம் தனது இளம் வயதிலேயே அரசியலுக்கு வந்தவர்.மிகச்சிறந்த பேச்சாளராக விளங்கிய அவர், ஜனதா கட்சியில் சேர்ந்த பிறகு அவசர காலத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டங்களில் தீவிரமாக ஈடுபட்டார்.

இந்திய அரசியல் மீது அவருக்கு இருந்த ஆர்வம், அவரை டெல்லியின் முதல் பெண் முதலமைச்சராக்கியது. பின்னர் சுஷ்மா ஸ்வராஜ், முதல் பெண் எதிர்க்கட்சி தலைவரானார்.தனது 27 வயதிலேயே ஹரியானா மாநில ஜனதா கட்சியின் தலைவரானார்.

1977 - அவரது 25வது வயதில் இந்தியாவின் இளம் கேபினட் அமைச்சரானார் சுஷ்மா ஸ்வராஜ். 1979 - 27 வயதில் ஹரியானா மாநில ஜனதா கட்சியின் தலைவரானார்.தேசிய அளவிலான கட்சியில் செய்தித் தொடர்பாளர் பதவியை வகித்த முதல் பெண் சுஷ்மா ஸ்வராஜ்.

இந்தியாவின் முதல் பெண் எதிர்க்கட்சி தலைவர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு. 2009ஆம் ஆண்டு டிசம்பர் 21 அன்று அத்வானிக்கு மாற்றாக சுஷ்மா எதிர்க்கட்சி தலைவராக பதவி ஏற்றுக் கொண்டார்.மே 26, 2014ல் இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சரானார்.2008 மற்றும் 2010ஆம் ஆண்டுகளில் சிறந்த நாடாளுமன்றவாதிக்கான விருதை அவர் பெற்றார். மிகச்சிறந்த நாடாளுமன்றவாதி என்ற விருதை பெற்ற இந்தியாவின் முதல் மற்றும் ஒரே பெண் நாடாளுமன்ற உறுப்பினர் இவர்தான்.some personal data about late sushma swaraj

சுஷ்மா ஸ்வராஜ் சிறுநீரக பிரச்சனை தொடர்பாக அவதிப்பட்டு வந்தார். அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.நரேந்திர மோதி தலைமையிலான முதல் அமைச்சரவையில் வெளியுறவு அமைச்சகராக இருந்த அவர், உடல் நலக்குறைவு காரணமாக 2019 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை.இந்நிலையில் நேற்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு திடீர் மாரடைப்பால் உயிரிழந்தார்.

பிரபலமான வெளியுறவுத்துறை அமைச்சராக விளங்கிய சுஷ்மா, இந்தியர்கள் வெளிநாடுகளில் சிக்கியதாக இந்தியர்கள் யாரேனும் ட்விட்டரில் தங்கள்பிரச்சினையைப் பதிவு செய்தால் போதும், எந்தவித பிரதிபலனும் எதிர்பாராமல் அவர்களுக்கு அவர்களுக்கு உடனடியாக உதவினார் .சுஷ்மா ஸ்வராஜ் உயிரிழந்த நிலையில், அவரிடம் உதவி பெற்ற இந்தியர்கள் பலரும் ட்விட்டரில் அவரது இழப்பிற்காக வருத்தம் தெரிவித்து வருகிறார்கள்.

Follow Us:
Download App:
  • android
  • ios