Asianet News TamilAsianet News Tamil

இந்தியா முழுவதும் களமிறக்கப்பட்டுள்ள ஸ்லீப்பர் செல்கள்... துணைபோகும் எதிர்கட்சிகள்... அதிர வைக்கும் நிலவரம்..!

இந்தியாவை போராட்டங்கள் மூலம் முடக்க ஸ்லீப்பர் செல்களை களமிறக்கி விட்டிருப்பதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். 
 

Sleeper cells deployed across India
Author
Tamil Nadu, First Published Feb 27, 2020, 1:02 PM IST

இந்தியாவை போராட்டங்கள் மூலம் முடக்க ஸ்லீப்பர் செல்களை களமிறக்கி விட்டிருப்பதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். 

டில்லியில் நடக்கும் போராட்டங்கள், மத்திய உளவுத் துறையின் தோல்வியை காட்டுகிறது. இதை நான் கடுமையாக கண்டிக்கிறேன். அமெரிக்க அதிபர் டிரம்ப் போன்ற தலைவர்கள் வந்திருந்த நேரத்தில், உளவுத்துறையினர் ஜாக்கிரதையாக இருந்திருக்க வேண்டும். இவ்விஷயத்தில் உளவுத் துறை சரியாக வேலை செய்யவில்லை என ரஜினிகாந்த் கூறியிருந்தார்.

Sleeper cells deployed across India

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள சமூக ஆர்வலர்கள், ‘’டெல்லி வன்முறையைக் கட்டுப்படுத்தி இருக்கலாம். அது பெரிய அளவில் நாடெங்கும் வியாதி போலப் பரவும் சாத்தியமிருக்கிறது. இந்தியாவின் எதிரி நாடுகள், வேறு விதமான போரை இப்போது தொடங்கியிருக்கின்றன.Sleeper cells deployed across India

 இந்தியா முழுவதும் ஸ்லீப்பர் செல்கள் ஏற்படுத்தி, ஏதாவது உகந்த தருணம் வரும் வரைக் காத்திருந்து, போராட்டங்களைக் கிளப்பி, அதில் இந்தியாவின் எதிர் கட்சிக்காரர்களையும் ஈடுபடுத்தி, கலவரத்தை வளர்த்து, நிலைமை கட்டுக்கடங்காமல் போக வைத்து, பொருளாதார சீர்குலைவை ஏற்படுத்தினால் அதிலிருந்து மீள்வது கடினம். அதே சமயம், வெளி நாட்டு, உள் நாட்டு ஊடகங்கள் விடாமல் இந்தியாவைத் தவறான முறையில் சித்தரித்து, நிலைமையை இன்னும் மோசமாக்கும். Sleeper cells deployed across India

இதெல்லாம் நடப்பதன் கரணம் மோடி அவர்கள் சரியான சட்டத் திருத்தங்களைக் கொண்டு வந்து கொண்டிருக்கிறார். பல பிரச்சனைகள் முடிவடைந்தால் அதை வைத்து ஆதாயம் அடைந்தவர்கள் நிலை சங்கடமாகி விடும். இந்தியா முன்னேறினால் பலருக்கு ஆகாது. அதனால்தான் இத்தனை அளவுக்கு ஒன்றும் இல்லாத விஷயத்தை ஊதி பெருக்குகிறார்கள்’எனக் குற்றம் சாட்டுகிறார்கள்.

Follow Us:
Download App:
  • android
  • ios