குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக, டெல்லி ஷாஹீன் பாக்கில் போராட்டம் நடத்தி வருபவர்கள் கொரோனா குறித்து அச்சம் இல்லை தங்களுக்கு இல்லை எனத் தெரிவித்தனர்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் அச்சம் ஆட்டிப்படைத்து வருகிறது. இந்தியாவில் தேசிய பேரிடராக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

 

இந்நிலையில், டெல்லியில், கொரோனா தாக்குதலை கட்டுப்படுத்த உடற்பயிற்சி கூடங்கள், இரவு கேளிக்கை விடுதிகள் உள்ளிட்ட, மக்கள் கூடும் இடங்கள், அரசு உத்தரவின்படி மூடப்பட்டு உள்ளன. மதம், சமூகம், கலை மற்றும் அரசியல் தொடர்பான கூட்டங்கள் நடத்தவும், 50 பேருக்கு மேல் மக்கள் ஒன்று கூடவும், மாநில அரசு தடை விதித்துள்ளது.

ஷாஹீன் பாகில், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக, 90 நாட்களுக்கும் மேலாக போராடுபவர்கள், 'முக கவசம் மற்றும் கை கழுவும் பொருட்களை வைத்திருப்பதால், கொரோனா அச்சம் இல்லை' என கூறியுள்ளனர். கோரோனா ஓரு பேரிடர் அபாயம் என்று அறிந்து மெக்காவிற்கு யாரும் வரக்கூடாது என்று சவூதி அரேபியா தடுப்பு நடவடிக்கை எடுத்து உள்ளது. CAA -வால் யாரும் வெளியேற்றப்படமாட்டார்கள் என்று நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் தெரிவித்தபிறகும் இந்த கூட்டம் எதற்க்காக இன்னும் இங்கு உள்ளது என்று தெரியவில்லை என ஆளும் கட்சியினர் கருத்து தெரிவித்துள்ளனர்.