Asianet News TamilAsianet News Tamil

சீமானின் பொய், பித்தலாட்டத்துக்கு ஒரு அளவே இல்லையா ? கொந்தளித்த விடுதலை ராஜேந்திரன் !!

விடுதலைப்  புலிகள் தலைவர் பிரபாகரனை யாரும் 10 நிமிடத்துக்கு மேல் சந்திக்க முடியாத நிலையில் அவருடன் விருந்து சாப்பிட்டேன், அது இது என கலர் கலராய் ரீல் விடும் சீமானின் பித்தலாட்டத்திற்கு முடிவு கட்டுவோம் என திராவிடர் விடுதலை கட்சித் தலைவர் விடுதலை ராஜேந்திரன் கொந்தளித்துள்ளார்.
 

seman is alier told viduthalai rajendran
Author
Chennai, First Published Dec 2, 2019, 9:00 AM IST

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனோடு மாதக்கணக்கில் பேசியவர்கள், அவரோடு தங்கியிருந்தவர்கள், போராட்ட களத்துக்கு ஆதரவாக இருந்தவர்கள், போராட்ட களத்தில் உடன் இருந்தவர்கள் , வைகோ, பழ. நெடுமாறன், கொளத்தூர் மணி, கோவை. ராமகிருஷ்ணன் போன்றவர்கள் எல்லாம் பேசாமல் இருக்கிறார்கள்.. 

சினிமா எடுக்க நல்ல இயக்குனர் தேவை என்று தலைவர் கேட்டு கொண்டதன் பேரில் கொளத்தூர் மணி தான் சீமானை தேர்வு செய்து ஈழத்திற்கு அனுப்பி வைத்தார்.. 

seman is alier told viduthalai rajendran

தலைவர் பிரபாகரனை சந்திக்க சீமானுக்கு ஒதுக்கப்பட்ட நேரம் பத்து நிமிடம் மட்டும் தரப்பட்டது. அதில் நான்கு நிமிடங்கள் தலைவரை சந்திப்பதற்கு முன்பான சோதனை செய்வதற்கே போய்விடும், நான் தலைவரை சந்தித்த போதும் அப்படி தான் சந்தித்தேன்..

இந்த 10 நிமிட சந்திப்பை வைத்து கொண்டு சீமான் அவர்கள் மாத கணக்கில் பிரபாகரனோடு பேசியதாகவும், அவரோடு தங்கியிருந்ததை போலவும், ஆமைகறி சாப்பிட்டதாகவும் கதை சொல்லி வருவது கைதட்டு வாங்குவதை தாண்டி ஈழத்தமிழர்களுக்கு எந்த பயனும் இல்லை.

அந்த சந்திப்பின் போது உடன் இருந்த புலிகள் தற்போதும் கனடாவில் இருந்து கடிதம் மூலம் கண்டனம் தெரிவித்த பிறகும் அவர் இவ்வாறு பேசிவருவது சரியல்ல என்பதையும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன் என தெரிவித்துள்ளார்.

seman is alier told viduthalai rajendran

தற்போது கோத்தபய ராஜபக்சே இந்தியா வந்த போது வைகோ அவர்கள் வழக்கம் போல் டெல்லியில் கருப்பு கொடி ஆர்ப்பாட்டத்தினை நடத்தினார். நாங்களும் சென்னையில் நடத்தினோம் இவர் எதையுமே செய்யவில்லை.

seman is alier told viduthalai rajendran

மாறாக பிரபாகரன் படத்தை போட்டுக்கொண்டு தமிழகத்தில் இவர் தான் பிரபாகரன் போன்ற தோற்றத்தை கொடுத்து வருகிறார். சீமானின் பொய் பிததலாட்டத்தை  வெளிச்சத்துக்கு கொண்டு வருவோம் என்றும் விடுதலை ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios