Asianet News TamilAsianet News Tamil

ஒரே ஒரு கவுன்சிலரை ஜெயிச்சிட்டு சீமான் இப்படி ஒரு முடிவா..? அதுக்கெல்லாம் தில்லுவேணும் ராசா..!

2021 சட்டமன்ற தேர்தலில் பெண்களுக்கு சரிபாதி வாய்ப்பு அளிக்கப்படும் என்று கூறியுள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், 234 தொகுதிகளில் 117 ஆண், 117 பெண் வேட்பாளர்கள் நிறுத்தப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.
 

Seeman will defeat one councilor .. It's all Diluvenam Raja
Author
Tamil Nadu, First Published Jan 4, 2020, 3:55 PM IST

நாம் தமிழர் கட்சியின் பொதுக் குழு கூட்டம் சென்னை வேலப்பன் சாவடியில் நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்திற்கு கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமை வகித்தார்.

 Seeman will defeat one councilor .. It's all Diluvenam Raja

பொதுக்குழு கூட்டத்தின்போது, குடியுரிமைச் சட்டத்திருத்தத்தையும், இசுலாமியப் பெண்களின் நலனென்று பெயரில் கொண்டு வரப்பட்டு திணிக்கப்பட்டிருக்கிற முத்தலாக் மசோதாவையும், மாநில அதிகாரத்தின் வரம்புக்குள் தலையிடும் ஆட்தூக்கிச் சட்டமான தேசியப் புலனாய்வு முகாமையையும்  உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும், மத்திய அரசின் எதேச்சதிகாரப்போக்கும், தவறானப் பொருளாதார முடிவுகளும் தொடர்ந்தால் அது நாட்டைப் படுகுழியில் தள்ளிவிடும். Seeman will defeat one councilor .. It's all Diluvenam Raja

ஆகவே, பொருளாதார நிபுணர்களை அழைத்து ஆலோசித்து நாட்டைத் தற்காத்துக் கொள்வதற்குரிய முன்னேற்பாடுகளைப் போர்க்கால அடிப்படையில் மத்திய அரசு விரைந்து செய்ய வேண்டும், தேர்தல்களை வாக்குச்சீட்டு முறையிலே நடத்த வேண்டும்  என்பது உள்ளிட்ட 18 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. Seeman will defeat one councilor .. It's all Diluvenam Raja

இதன்பின்னர் செய்தியாளர்கல்ளிடம் பேசிய அவர், ’’ஊரக உள்ளாட்சி தேர்தலில் 10 சதவீத வாக்குகளை நாம் தமிழர் கட்சி பெற்றுள்ளது. இதனால் இந்த தேர்தல் எங்களுக்கு பின்னடைவு அல்ல. இம்மாத இறுதிக்குள் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படும். அதன் பின்னர் சொந்த தொகுதியில் அவர்கள் ஒன்றரை ஆண்டுகள் களப்பணியில் ஈடுபடுவார்கள்’’என அவர் தெரிவித்தார்.

Follow Us:
Download App:
  • android
  • ios