நடராஜனைப் பார்த்துவிட்டு உடனே திரும்பிய சசிகலா...(வீடியோ)

sasikala meet natarajan in hospital vedio
First Published Oct 7, 2017, 5:58 PM IST | Last Updated Sep 19, 2018, 3:17 AM IST



உடல் நலக்குறைவால் சென்னை குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கணவர் நடராஜனை சந்திக்க இன்று சசிகலா மருத்துவமனைக்கு வந்தார். இவர் மருத்துவமனைக்கு வரும் செய்தியை அறிந்த தொண்டர்கள் பலர் சசிகலாவை உற்சாகமாக வரவேற்றனர். மேலும் வழி எங்கும் அவரை வரவேற்று பேனர்கள், போஸ்டர்களை ஒட்டி தங்களுடைய ஆதரவைத் தெரிவித்தனர்.

மருத்துவமனையில் தனது கணவர் நடராஜனை சந்தித்து உடல் நலம் விசாரித்த சசிகலா, அவரிடம் ஓர் இரு வார்த்தைகள் மட்டுமே பேசியதாகக் கூறப்படுகிறது. பின் மருத்துவர்களிடம் நடராஜனுக்குக் கொடுக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து சசிகலா கேட்டறிந்தார்.

மருத்துவமனைக்கு வந்த சசிகலா, இன்று மாலை ஐந்து மணிவரை மருத்துவமனையிலேயே இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் 2 மணி அளவிலேயே மருத்துவமனையில் இருந்து தி நகரில் உள்ள இளவரசியின் மகள் வீட்டுக்குத் திரும்பிவிட்டார். கணவரைக் பார்க்க பாடுபட்டு பரோலில் வந்த சசிகலா, வெகு நேரம் மருத்துவமனையில் இல்லாமல், உடனடியாக ஏன் வீடு திரும்பி விட்டார் என பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.