கணவரை சந்திக்க மருத்துவமனைக்குச் சென்ற சசிகலா (வீடியோ)
சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்று பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா, தனது கணவர் நடராஜன் உடல் நலம் இல்லாமல் இருப்பதால் அவரை சந்திக்க 15 பரோல் கேட்டு விண்ணப்பித்திருந்தார்.
ஆனால் சசிகலாவிற்கு கடுமையான நிபந்தனைகளோடு 5 நாட்கள் மட்டுமே பரோலில் செல்ல அனுமதி கொடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து நேற்று சென்னை வந்த அவர், இன்று 11 மணி அளவில் கணவர் நடராஜன் அனுமதிக்கப்பட்டுள்ள பிரபல தனியார் மருத்துவமனைக்குச் சென்று, நடராஜனை சந்தித்தார்.
மேலும் சசிகலாவின் ஆதரவாளர்கள் பலர் சசிகலாவின் கார் முன்பு கூடி, சின்னம்மா... சின்னம்மா... என்று கோஷம் போட்டுக் கொண்டும் போஸ்டர்கள், பேனர்கள் வைத்தும் தங்களுடைய ஆதரவை வெளிப்படுத்தினர்.