Asianet News TamilAsianet News Tamil

பிரதமருக்கு கால் தூசி கூடப் பெறாத சொறி நாயெல்லாம் அவரைப் பார்த்து குலைக்குது.. எஸ்.வி.சேகர் சர்ச்சை ட்வீட்..!

கொரோனா வைரசை கட்டுப்படுத்தவே ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. வீட்டில் முடங்கிக் கிடக்கும் சிரமம் எனக்கு புரிகிறது, இந்த சூழலில் வேறு வழியில்லை. கொரோனாவை கட்டுப்படுத்த கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டியுள்ளது. ஊரடங்கு உத்தரவுக்கு நான் மக்களிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் என்றார்.

s.ve.shekher controversy twitt
Author
Tamil Nadu, First Published Mar 31, 2020, 6:23 PM IST

உங்களைப் போன்ற நாசமாய்ப் போனமனுஷங்க திருந்தத்தான் கீதை படிக்க வேண்டும். காலையில பல்லுகூட விளக்காம மூளை, மனசு பூர மலத்ததை வச்சுகிட்டு எழுதினா இப்படித்தான் வரும் என்று கடுமையாக எஸ்.வி.சேகர் விமர்சனம் செய்துள்ளார்.

கொரோனா வைரஸ் பாதிப்பு தடுப்பு நடவடிக்கையாக இந்தியா முழுவதும் ஏப்ரல் 15ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மன் கி பாத் வானொலி நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி;- கொரோனா வைரசை கட்டுப்படுத்தவே ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. வீட்டில் முடங்கிக் கிடக்கும் சிரமம் எனக்கு புரிகிறது, இந்த சூழலில் வேறு வழியில்லை. கொரோனாவை கட்டுப்படுத்த கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டியுள்ளது. ஊரடங்கு உத்தரவுக்கு நான் மக்களிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் என்றார். 

s.ve.shekher controversy twitt

மேலும், கொரோனாவை தடுப்பது என்பது வாழ்வா சாவா போராட்டம் போன்றது. நான் எடுத்த முடிவால் என்மீது சிலர் கோபத்தில் இருப்பதை நான் அறிவேன். ஏழை மக்கள் பாதிக்கப்பட்டாலும் கொரோனாவை கட்டுப்படுத்த இதைத்தவிர வேறு வழி இல்லை என்று கூறினார். இந்நிலையில், கீதை படியுங்கள் என்று கெஜ்ரிவால் கூறியதற்கு எழுத்தாளர் அருணன் , தி.க. வீரமணி ஐயா எழுதிய கீதையின் மறுபக்கமும் படியுங்கள் என்று கூறினார். 

 

அதற்கு நடிகரும், அரசியல்வாதியுமான பாஜகவின் எஸ்.வி.சேகர் தனது டுவிட்டர் பக்கத்தில் அதைப் படிச்சு உங்களைப் போன்ற நாசமாய்ப் போனமனுஷங்க திருந்தத்தான் கீதை படிக்க வேண்டும். காலையில பல்லுகூட விளக்காம மூளை, மனசு பூர மலத்ததை வச்சுகிட்டு எழுதினா இப்படித்தான் வரும் என்று கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும் நம் நாட்டின் பிரதமருக்கு கால் தூசி கூடப் பெறாத சொறி நாயெல்லாம் அவரைப் பார்த்து குலைக்குது என்றும் கூறியுள்ளது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios