Asianet News TamilAsianet News Tamil

யாருமே என்னை பிரசாரத்துக்கு கூப்பிடல... நடிகர் எஸ்.வி. சேகருக்கு வந்த சோதனை!

நாடாளுமன்றத் தேர்தலில் தான் ஏன் பிரசாரம் செய்யவில்லை என்பது குறித்து நடிகரும் பாஜக பிரமுகருமான எஸ்.வி. சேகர் விளக்கம் அளித்துள்ளார்.

S.Ve. Sekar upset with party
Author
Chennai, First Published Apr 14, 2019, 1:19 PM IST

அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாஜக 5 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அக்கட்சியைச் சேர்ந்த தமிழிசை, பொன். ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, சிபி.ராதாகிருஷ்ணன், நயினார் நாகேந்திரன் ஆகியோர் தேர்தலில் போட்டியிடுகிறார்கள். இந்தத்  தேர்தலில் பாஜகவைச் சேர்ந்த நடிகர் எஸ்.வி.சேகர் நட்சத்திர பிரச்சாகராக இருப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. தேர்தல் பிரசாரம் முடிய இன்னும் இரு தினங்கள் மட்டுமே உள்ள நிலையில், இதுவரை அவர் தேர்தல் பிரசாரத்தில் தலைகாட்டவில்லை.

S.Ve. Sekar upset with party
இந்நிலையில் தான் ஏன் பிரசாரத்தில் ஈடுபடவில்லை என்பது குறித்து எஸ்.வி.சேகர் விளக்கம் அளித்துள்ளார். S.Ve. Sekar upset with party
“பாஜக கூட்டணியை ஆதரித்து தேர்தல் பிரசாரம் செய்ய தயாராக இருந்தேன். என்னை அழைப்பார்கள் என்று காத்திருந்தேன். ஆனால், யாரும் அழைக்கவில்லை. யாருடைய தயவும் இல்லாமல் தேர்தலில் வெற்றிபெற்றுவிடலாம் என்று நினைத்து என்னை அழைக்காமல் இருந்திருக்கலாம். ஆனால், நான் சமூக வலைத்தளங்களில் மோடிக்கு ஆதரவாகப் பிரசாரம் மேற்கொண்டு வருகிறேன். இப்போது என்னை அழைத்தாலும் பிரசாரம் செய்ய தயாராக இருக்கிறேன்” என்று எஸ்.வி.சேகர் தெரிவித்திருக்கிறார்.  

Follow Us:
Download App:
  • android
  • ios