தி.மு.க., தலைவர் கருணாநிதி உயிருடன் இருந்தபோது பொங்கல் அன்று அவரது குடும்பத்தினர், கட்சியினர், சென்னை, கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதி வீட்டுக்கு போய், வாழ்த்து வாங்குவார்கள். 

அவர்களுக்கு கருணாநிதி, புதிய 10 ரூபாய் நோட்டை கொடுத்து வாழ்த்துவார். பின் கட்சியினர், ஆழ்வார்பேட்டையில் இருக்கிற ஸ்டாலின் வீட்டுக்கு செல்வார்கள். அவரும் புதிய 20 ரூபாய் நோட்டை கொடுத்து வாழ்த்துவார். கருணாநிதி மறைவால், கடந்த பொங்கலுக்கு மு.க.ஸ்டாலினை, முக்கிய நிர்வாகிகள் மட்டும் சந்தித்து 20 ரூபாயை வாங்கினார்கள். அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் வருகிறது. 

அதனால் பொங்கலுக்கு, கருணாநிதி நினைவிடத்தில் ஸ்டாலின் கையால் கட்சியினருக்கு, 10 ரூபாய் தரலாமா என யோசிக்கிறாராம். கருணாநிதியோட பதவிக்கு வந்தாயிற்று. அதனால், 20 ரூபாயையே  கொடுக்கலாம் என சிலர் யோசனை கூறி வருகிறார்கள்.