இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில்  அவர், ’’புவிவெப்பமயமாதலுக்கு காரணமான பசுமை இல்ல வாயுக்கள் வெளியாவதைத் தடுப்பதற்காக நிலம், நீர் ஆகிய இரண்டிலும் போராட்டங்களை நடத்தியது பா.ம.க.வும், பசுமைத் தாயகமும். இதனால் மக்கள் விழிப்படைந்து  புவிவெப்பமயமாதலைக் கட்டுப்படுத்த பாடுபட்டால் மிகவும் மகிழ்ச்சி அடைவேன்!

பசுமைத்தாயகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள பிளாஸ்டிக் கழிவுகளுக்கு அரிசி வழங்கும்  திட்டத்தில் அனைத்து நிர்வாகிகளும் போட்டி போட்டு சிறப்பாக செயல்பட வேண்டும். சிறப்பாக செயல்படுவோருக்கு எனது சார்பில் பரிசுகள் காத்திருக்கின்றன!

புவிவெப்பமயமாதல் விவகாரத்தில் உலக விஞ்ஞானிகளின் எச்சரிக்கையை மக்களிடம்  கொண்டு செல்லும் நோக்கத்துடன் தான் ஆகஸ்ட் 20-ஆம் தேதி முதல் பா.ம.க மற்றும் பசுமைத்தாயகம் பல்வேறு இயக்கங்களை நடத்தி வருகின்றன. இதை புரிந்து கொண்டு மக்கள் மாற வேண்டும்; அரசுகள் அவசர நிலையை அறிவிக்க வேண்டும்’’எனத் தெரிவித்துள்ளார்.